பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. பகவத்கீதை முன்னுரை புத்தியிலே சார்பு எய்தியவன், இங்கு, நற் செய்கை திச்செய்கை. இரண்டையும் துறந்து விடுகின்ருன். ஆதலால் யோக நெறியிலே. பொருந்துக. யோகம் செயல்களிலே திறமையானது. (கீதை, 2-ஆம் அத்தியாயம்; 50-ஆம் சுலோகம்.) இஃதே கீதையில் பகவான் செய்யும் உபதேசத்துக் கெல்லாம். அடிப்படையாம். புத்தியிலே சார்பு எய்தலாவது, அறிவை முற்றிலும் தெளிவாக மாசுமறுவின்றி வைத்திருத்தல். தெளிந்த புத்தியே டிெ சுலோகத்திலே புத்தி என்று சொல்லப்படுகிறது. அறிவைத் தெளிவாக கிறுத்திக் கொள்ளுதலாவது யாதென்ருல். கவலை கினைப்புக்களும் அவற்றுக்கு ஆதாரமான பாவ கினைப்புக். களுமின்றி அறிவை இயற்கை கிலேபெறத்திருத்துதல். நீங்கள் குழந்தைகளைப் போல ஆலைன்றி, மோr ராஜ்யத்தை எய்தமாட்டீர்கள் என்று யேசு கிறிஸ்து சொல்லியதும் இதே கருத்துக் கொண்டுதான். 'குழந்தைகளைப்போல ஆய்விடுங்கள் என்ருல், ! உங்களுடைய லெளகிக அனுபவங்களே யெல்லாம். மறந்து விடுங்கள் ; நீங்கள் படித்த படிப்பை யெல்லாம் இழந்து விடுங்கள் மறுபடியும் சிசுக் களைப்போலே தாய்ப் பால் குடிக்கவும் மழலைச் சொற்கள் பேசவும் தொடங்குங்கள்’ என்பது கொள்கை யன்று, ஹிருதயத்தைக். குழந்தைகளின் ஹிருதயம் போலே கிஷ்களங்கமாகவும் சுத்த மாகவும் வைத்துக் கொள்ளுங்கள் என்பது கருத்து. ஹிருதயம் தெளிந்தாலன்றி, புத்தி தெளியாது. ஹிருதயத்தில் பரிபூரணமான சுத்த கிலே ஏற்படும் வரை புத்தி இடையிடையே தெளிந்தாலும், மீட்டு மீட்டும் குழம்பிப் போய்விடும். ஹிருதயம் சுத்தமால்ை தெளிந்த புத்தி தோன்றும். பகவான் சொல்லுகிருர் :- "அந்த அறிவுத் தெளிவிலே கிலே பெற்றுகில், அர்ஜுன” என. அப்போது நீ செய்யும் செய்கை யாதாயினும், அது கற் செய்கையாம். நீ ஒன்றும் செய்யாதே மனம் போனபடி