பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகவத்கீதை முன்னுரை I?5 உடம்பினல் செய்யப்படும் தொழில் மாத்திரமே தொழிலன்று. மனத்தால் செய்யப்படும் தொழிலும் தொழிலேயாம். ஜபம் தொழில் இல்லையா ? சாஸ்த்ரங்களெல்லாம், கவிதைகளெல்லாம், நாடகங்களெல்லாம், சட்டங்களெல்லாம், வேதங்களெல்லாம், புராணங்களெல்லாம், கதைகளெல்லாம், காவியங்களெல்லாம் தொழில்கள் அல்லவா ? இவை எல்லாம் உடம்பாற் செய்வதின்றி மனத்தாற் செய்யப்படுவன அன்ருே ? அறிவுத் தெளிவைக் கலங்க விடாதே. அப்பால், யோகம் பண்ணு. எதன் பொருட்டெனில், யோகமே செய்கைகளில் திறமையாவது ' என்று பூரீ கிருஷ்ணன் சொல்லுகிருர். தொழிலுக்குத் தன்னைத் தகுதியுடையவனுகச் செய்து கொள் வதே யோகம் எனப்படும். யோகமாவது ஸ்மத்வம். ஸ்மத்வம் யோக உச்யதே'. அதாவது, பிறிதொரு பொருளேக் கவனிக்குமிடத்து, அப்போது மனத்தில் எவ்விதமான சஞ்சலமேனும் சலிப்பேனும் பயமேனும் இன்றி, அதை ஆழ்ந்து, மனம் முழுவதையும் அதனுள் வயப் படுத்திக் கவனிப்பதாகிய பயிற்சி. நீ ஒரு பொருளுடன் உறவாடும்போது, உன் மனம் முழுதும் அப்பொருளின் வடிவமாக மாறிவிட வேண்டும். அப்போதுதான் அந்தப் பொருளை கேன்ருக அறிந்தவனவாய். " யோகஸ்த, குரு கர்மாணி' என்று கடவுள் சொல்லுகிருர். யோகத்தில் கின்று தொழில்களை செய்' என. யோகி தன் அறிவை கடவுளின் அறிவு போலே விசாலப் படுத்திக் கொள்ளுதல் இயலும். ஏனென்ருல், ஊன்றிக் கவ னிக்கும் வழக்கம் அவனுக்குத் தெளிவாக அர்த்தமாய் விடுகிறது. ஆதலால் அவனுடைய அறிவு தெய்வீகமான விசாலத்தன்மை பெற்று விளங்குகிறது. அவனுடைய அறிவுக்கு வரம்பே கிடையாது. எனவே, அவன் எங்கும் கடவுள் இருப்பதைக் காண்கிருன். வேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப்பட்டது. ரிக் வேதத்திலுள்ள புருஷஸூக்தம் சொல்லுகிறது. இஃதல்லாம் கடவுள்' என்று. இந்தக் கருத்தை