பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 பாரதி தமிழ் யொட்டியே கீதையிலும் பகவான், ' எவன் எல்லாப் பொருள் களிலும் ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லாப் பொருள்களையும் பார்க்கிருனே, அவனே காட்சி யுடையான் ' என்கிரு.ர். யுேம் கடவுள். நீ செய்யும் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்கள். நீ பந்தத்தில் பிறப்பதும் கடவுளுடைய செயல். மேன்மேலும் பல தளைகளை உனக்கு நீயே பூட்டிக் கொள்வதும் கடவுளுடைய செயல். நீ முக்தி பெறுவதும் கடவுளுடைய செயல். ஆனல் நான் எதற்காகத் தளை நீங்கும்படி பாடுபட வேண்டும் ? எல்லாம் கடவுளுடைய செய்கையாக இருக்கும் போது முக்தியடையும்படி நான் ஏன் முயற்சி செய்யவேண்டும்? ' என்று ஒருவன் கேட்பாயிைன், அதற்கு நாம் கேட்கிருேம் : முக்தியாவது யாது எல்லாத் துயரங்களும் எல்லா அச்சங்களும் எல்லாக் கவலே களும் நீங்கி கிற்கும் கிலேயே முக்தி. அதனை எய்த வேண்டு மென்ற விருப்பம் உனக்கு உண்டாயின், நீ அதற்கு உரிய முயற்சி செய். இல்லாவிட்டால், துன்பங்களிலே கிடந்து ஓயாமல் உழன்று கொண்டிரு, உன்னே யார் தடுக்கிருர்கள் ? ஆனால், நீ எவ்விதச் செய்கை செய்தபோதிலும், அது உன்னுடைய செய்கை இல்லை, கடவுளுடைய செய்கை என்பதை அறிந்துகொண்டு செய், அதல்ை உனக்கு நன்மை விளையும் என்று சாஸ்திரம் சொல்லு கிறது. 'ஸர்வம் விஷ்னுமயம் ஜகத் என்பது ஸநாதன தர்மத் தில் வித்தாந்தம். எல்லாம் கடவுள் மயம், எல்லாத் தோற்றங் களும், எல்லா வடிவங்களும், எல்லா உருவங்களும், எல்லாக் காட்சிகளும், எல்லாக் கோலங்களும், எல்லா கிலேமைகளும், எல்லா உயிர்களும், எல்லாப் பொருள்களும், எல்லாச் சக்திகளும், எல்லா நிகழ்ச்சிகளும், எல்லாச் செயல்களும் - எல்லாம் ஈசன் மயம். (ஆதலால், எல்லாம் ஒன்றுக்கொன்று ஸ்மானம்.) "ஈசா வாஸ்யம் இதம் ஸர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத்” என்று ஈசா வாஸ்யோபநிஷத் சொல்லுகிறது. அதாவது:- இவ்வுலகத்தில் நிகழ்வது யாதாயினும் அது கடவுள் மயமானது என்று பொருள் படும். இந்தக் கருத்தையே:று கிருஷ்ணன் பகவத் கீதையில், இவ் வுலகனைத்திலும் கிரம்பிக் கிடக்கும் கடவுள் அழிவில்லாதது என்று உணர்' என்று சொல்லுகிருர்.