பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகவத்கீதை முன்னுரை 177 எனவே, எல்லாம் கடவுள் மயமாய், எல்லாச் செயல்களும் கடவுளின் செயலாக கிற்கும் உலகத்தில், எவனும் கவலைப் படுதலும், துயர்ப்படுதலும் அறியாமையன்ருே ? 'எல்லாம் சிவன் செயல்' என்ருல், பின் எதற்கும் நான் ஏன் வருத்தப்பட வேண்டும்? இட்டமுடன் என் தலையில் இன்னபடி என் றெழுதி விட்ட சிவன் செதீது விட்டானே ? . நrத்திரங்க ளெல்லாம் கடவுள் வலியால் சுழல்கின்றன. திரிலோகங்களும் அவனுடைய சக்கரத்தில் ஆடுகின்றன. நீ அவன். உன் மனம், உன் மனத்தின் கினைப்புகள் எல்லாம் அவனே. 'ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்”-அங்கனமாக, மானுடா, நீ ஏன் வீணுகப் பொறுப்பைச் சுமக்கிருய் பொறுப்பையெல் லாம் தொப்பென்று கீழே போட்டுவிட்டு வந்தோஷமாக உன்னல் இயன்ற தொழிலைச் செய்து கொண்டிரு. எது எப்படியால்ை உனக்கு என்ன? யோ இவ்வுலகத்தைப் படைத்தாய் உலகம் என்னும்போது உன்னைத் தவிர்ந்த மற்ற உலகத்தை யெல்லாம். கணக்கிடாதே. நீ உட்பட்ட உலகத்தை, உனக்கு முக்தியே உன் பூர்வகாரணமாக நின்று உன்னே ஆக்கி வளர்த்துத் துடைக்கும் உலகத்தை, மானுடா, யோ படைத்தாய் யோ இதை கடத்து கிருய் ? உன்னேக் கேட்டா நகrத்திரங்கள் கடக்கின்றன ? உன்னைக் கேட்டா நீ பிறந்தாய்? எந்த விஷயத்துக்கும் நீ ஏன் பொறுப்பை வஹித்துக் கொள்கிருய்? கடவு ள் சொல்லுகிருர் :-"லோபமும் பயமும் சினமும் அழிந்து, என்மயமாய், என்னேச் சார்ந்தோராய், ஞானத் தவத் தால் தூய்மை பெற்ருேர் பலர் எனது தன்மை எய்தியுள்ளார்' (கீதை, 4-ஆம் அத்யாயம் ; 10-ஆம் சுலோகம்). இந்த சுலோகத் தில் ஒருவன் இஹலோகத்திலேயே ஜீவன் முக்தி பெற்று ஈசுவரத் தன்மை அடைவதற்குரிய உபாயம் பகவானல் குறிப்பிடப்பட்டி ருக்கிறது. "ஞானத்தைக் கடைப்பிடி. அதனேயே தவமாகக் கொண்டு ஒழுகு. சினத்தை விடு. விருப்பத்தை விடு. என்னேயே சரணுகக் கொண்டு என்னுடன் லயித்திரு. நீ எனது தன்மை பெறுவாய்' என்று கடவுள் சொல்லுகிருர். எல்லாச் செயல்களையும் கடவுளுக்கென்று ஸ்மர்ப்பித்து விட்டுப் பற்றுதல் நீங்கி எவன் தொழில் செய்கிருனே அவனைப் tur–12