பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 பாரதி தமிழ் தாய் தந்தையரின் நோய் வலியாலும், விதவைத் தங்கையின் இளமை வலியாலும் மேற்படி மஹாலிங்கையர் மனத்துயர் பெருகித் தலை மயிரெல்லாம் அன்னத் து விபோல் கரைத்துக் கூனிக் குறுகி மிகவும் மெலிந்து, கன்னங்கள் ஒட்டிக் கண்கள் குழி வீழ்ந்து முகம் சுருங்கித் திரை கொண்டு, இளமையிலே பாராட்டிய சிங்கார ரஸ்மிகுதியால் மேகநோய் கொண்டு, முகத்திலும் முதுகிலும் தோட்களிலும் பரந்த மேகப் படை களுடையவராய் விளங்கினர். இப்படியிருக்கையில் ஒரு மார்கழி மாதத்திரவில் வானம் மைபோல் இருண்டிருந்தது. கஷத்திரங்களெவையும் கண்ணுக் குப்புலப்படவில்லை. கிராமத்தாரெல்லாரும் தத்தம் வீடுகளுக் குள்ளே பதுங்கிக் கிடந்தார்கள். வெளியே பெரு மழையும் குறைக்காற்றும் மிகவும் உக்ரமாக வீசத் தொடங்கின. இரண்டு கூடிணத்துக்கு ஒருமுறை, உலகம் தகர்ந்து விடச்செய்வன போன்ற இடியோசைகள் செவிப்பட்டன. மரங்கள் ஒடிந்து விழும் ஒலி கேட்டது. தோப்புகளெல்லாம் சூறைபோகும் ஒலி பிறந்தது. பக்கத்துக்குன்றுகள் ஒன்றுங்கொன்று மோதிச் சிதறுவன போன்ற ஓசை தோன்றிற்று. அக்ரஹாரத்தில் தத்தம் வீடுகளுக்குள்ளே பதுங்கியிருந்த ஜனங்கள் இன்றுடன் உலகம் முடிந்துபோய் விட்டது என்று தம் மனதில் கிச்சயப்படுத்திக் கொண்டார்கள். குழந்தைகளெல்லாம் பயமிகுதியால் கோ கோ என்று அலறின. மாதர்கள் புலம்பினர். ஆண் மக்கள் விம்மினர். குறைக்காற்றின் ஆர்ப்பு மிகுதிப்பட்டது. இப்படியிருக்கையில் பூகம்பம் தொடங்கிற்று. அந்த அக்ர ஹாரத்திலுள்ள வீடுகளெல்லாம் பழைய வீடுகள். அத்தனை வீடுகளும் சிதறிப் போயின. அத்தனை ஜனங்களும் மடிந்து போயினர். மஹாலிங்கையர் வீட்டு வாயிற் புறத்திலிருந்த குச்சிலொன்று மாத்திரம் விழவில்லை. வீட்டு இரேழியில் கூடியிருந்த கிழவர், கிழவி, மஹாலிங்கையர், அவருடைய ஐந்து பெண் குழந்தைகள்எல்லார் மீதும் வீடு விழுந்து, அவர்களத்தனே பேரும் பிணங் களாகக் கிடந்தனர். வாயிற் குச்சிலில் பிரஸவ வேதனையில்