பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. வேதரிவிகளின் கவிதை (முகவுரை மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது) பூநீகாசியில் ஹிந்து ஸர்வகலா சங்கத்திற்கு அஸ்திவாரக் கல் நாட்டியபோது பல வித்வான்கள் வந்து உபக்யாஸம் செய்தார் கள். இவற்றுள்ளே, நவீன சாஸ்திர (ஸயன்ஸ்) பண்டிதர்களின் சிகாமணியாக விளங்கும் பூரீமான் ஜகதீச சந்திர வஸ்" செய்த உபக்யாசம் மிகவும் மாண்புடையது. "லெளகிக சாஸ்திர ஆராய்ச்சிகளிலே மறுபடியும் பாரத தேசம் தலைமை வகிக்கும்படி செய்வது நம்முடைய கடமை” என்பதை இவர் பல வகையிலே விளக்கிய பின்பு, தமது முடிவுரையில் பின்வருமாறு சொல்லுகிருர்: ஹிந்து நாகரிகத்திற்குள்ளே ஒரு விசேஷ சக்தியிருக்கிறது. காலத்தின் அழிவுகளையெல்லாம், உலகத்திலேயுள்ள பொருள னைத்தையும் சிதைவுபடுத்த வரும் மாறுதல்களேயெல்லாம், இந்த சக்தியினலே கமது நாகரிகம் எதிர்க்க வல்லதாயிற்று. (எகிப்து தேசத்தில்) நீல நதிக்கரையிலேயும், அஸ்வரிேயா தேசத்திலும், பாபிலோனிலும், பல்லாயிர வருஷங்களுக்கு முன்னே, பெரிய பெரிய அறிவுப் பயிற்சிகள் தோன்றி வளர்ந்ததையும், மாறியதை யும், மறைந்ததையும் நமது மஹத்தான நாகரிகம் பார்த்துக் கொண்டிருந்தது. (அப்போது கூட நமது நாகரிகம் அளவிட முடியாத பழமை கொண்டதாக விளங்கிற்று.) அந்த நாளிலே பாரத மாதா தனக்கு அழிவில்லையென்ற தீராத பக்தியுடன் விளங்கிள்ை. இன்றும் யெளவனத்தோடிருக்கிருள். இனி, எதிர்காலத்திலும் அழியமாட்டோமென்கிற தீராத பக்தியிலே உறுதிகொண்டு கிற்கிருள்.' இங்ங்னம், நவீன சாஸ்திரக் கல்வியாகிய குன்றத்தின் மேலே நெருப்புத் துணைப்போல ஒளிவீசி கிற்கும் பூரீமான் வஸ் கூறிய வார்த்தைகள் வெறுமே உபசாரமல்ல. நம்முடைய இடைக் காலத்து மடமைகளே யெல்லாம் மஹிமைகளென்று கினைத்து