பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. தராசு என்ற கட்டுரையில் ஒரு பகுதி சென்ற வாரம் சென்னப்பட்டணம் கந்தசாமிக் கோயில் வஸந்த மண்டபத்தில், சாது மஹா ஸ்ங்கத்தாரின் ஏற்பாட்டிலே ஒரு கூட்டம் கடந்தது. அதிலே, ஸ்வாமி அத்புதாநந்தர் என்பவர் ஒரு நேர்த்தியான உபங்யாஸம் செய்ததாகத் தெரிகிறது. ஸ்வாமி சொல்லியதன் சுருக்கம் :- மத விஷயங்களில் நமது முன்னேர் மிகவும் உயர்ந்த ஆராய்ச்சிக்கள் செய்து வைத்திருக் கிருர்கள். இவற்றை நாம் கன்ருகத் தெரிந்து கொண்டு உலகத் தாருக்கெல்லாம் உபதேசம் செய்ய வேண்டும். இவ்விஷயத்தில் அமெரிக்கா, ஐரோப்பா முதலிய வெளி தேசத்தார் நமது உதவியை எதிர்பார்த்து கிற்கின்றனர்.” இனி, "மத விஷயங்கள்' என்பவை பாரமர்த்திக உண்மை களாம் ; அதாவது ஐம்புலன்களுக்கெட்டாத, சுத்த அறிவில்ை காணுதற்குரிய தெய்வீக உண்மைகள் ; இவை ஞானம், பக்தி, யோகம் என்னும் வழிகளிலே கிடைப்பனவாகும். இவற்றை கமது முன்னேர் பெரிய பாடுபட்டுத் தேடித் தம்முடைய நூல்களிலே திரட்டி வைத்திருக்கிருர்கள். இந்தச் செல்வத்தை நாம் திறமையுடன் கையாண்டு உலகத்தாருக்கெல்லாம் வாரிக் கொடுத்து இவ்வுலகத்தின் துன்பங்களையும், சிறுமைகளையும், அறியாமைகளையும் மாற்றி இதனை மேன்மைப்படுத்த வேண்டும். 'காம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு காமுறுவர் கற்றறிந்தார்' என்று திருவள்ளுவர் சொல்லியபடி, இஃதே ஸ்வாமி அத்புதாந்த ருடைய கருத்தாகும். இதை கான் பரிபூர்ணமாக அங்கீகாரம் செய்து கொள்ளுகிறேன். ஆனல் நமது ஆசையை இவ்வளவுடன் நிறுத்திவிடலாகாது. லெள கிக விஷயங்களிலும் நமது உதவியை உலகம் வேண்டித்தான் கிற்கிறது. இதை காம் மறந்துவிடலா காது. நமது முன்னேர் பாரமார்த்திகச் செய்திகளில் மாத்திரமே