பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 பாரதி தமிழ் கிகரற்ற மேன்மையடைந்திருந்ததாக கினைத்து விடலாகாது. இஹலோக அறிவிலும் ஆச்சரியமான உயர்வு பெற்றிருந்தார்கள். பல தேசங்களையும் அவற்றின் பலவித சாஸ்திரங்களையும் நன்ருக அறிந்த எனது நண்பரொருவர் ஐரோப்பாவில் மஹா கீர்த்தி பெற்றிருக்கும் யவனத்துக் (கிரேக்க தேசத்துச்) சிற்பத்தைக் காட்டிலும் நமது புராதனச் சிற்பம் மேம்பட்டதென்று கருது கிருர். இதை வெளியுலகத்தாருக்கு விளங்கச் செய்யவேண்டு மென்ற நோக்கத்துடன், நீ ஆனந்தகுமாரசாமி முதலிய வித் வான்கள் மிகவும் உழைத்து வருகிருர்கள். ஆனல் இதை இங்கு நமது தமிழ் நாட்டிலே வாழும் ஜனங்களுக்கு விளங்கக் காட்டுவார் யாரையும் காணவில்லை. பல தேசத்து ஸங்கீதங்களேயும் நான் ஒருவாறு ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறேன். நமது புராதன ஸங்கீ தத்துக்கு நிகரானது இவ்வுலகத்தில் வேறெங்குமில்லை என்பது என்னுடைய முடிவு. கவிதை விஷயத்திலும் இப்படியே. இனி கணிதம், ரஸாயனம் முதலிய வேறு பல சாஸ்திரங்களும் நமது தேசத்திலேதான் முதலில் வளர்ச்சி பெற்றவையாகும். காம் இஹலோகத்து அறிவிலும் மேம்பாடு பெறவேண்டும். தெரியாத சாஸ்திரங்களின் ஆரம்பங்களைப் பிறரிடமிருந்து கற்று கொள்ள வேண்டும். பிறகு அவற்றை நமது ஊக்கத்தாலும் உயர்மதியாலும் மேன்மேலும் வளர்த்து மீளவும் உலகத்தாருக்கு ஊட்டவேண்டும். இஹலோக வளர்ச்சியிலே நாம் தலைமை வகிக்க வேண்டும். அதற்கு நாமே தகுதியுடையோர். ※ 宏 :: பம்பாயில் கடக்கப்போகிற காங்கிரஸ் ஸ்பைக்குப் பல ஊர்களி லிருந்தும் பிரதிநிதிகள் வருவதிலே சில மாதர்களும் பிரதிநிதி களாக வரக்கூடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண் பிரதி நிதிகளுக்கு வேண்டிய உதவிகள் செய்யும் பொருட்டு தர்ம ஸ்ேவகர்களாக (வாலண்டியர்களாக) ஆண் பிள்ளைகள் முற்பட்டு வந்திருப்பது போலவே, பெண் பிரதிநிதிகளுக்கு வேண்டிய உபகா ரங்கள் செய்வதற்காகத் தர்ம ஸேவகப் பெண்கள் சிலர் முற்பட்டி ருப்பதாகத் தெரிகிறது. இந்தப் புதுமை நமது தேசத்துக்குப் பெரியதோர் நன்மைக்குறியென்பது என்னுடைய கொள்கை. 米 求 ※