பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தராசு என்ற கட்டுரையில் ஒரு பகுதி 191 அடடா 1 விளையாட்டுப்பேச்சை மறக்தல்லவோ போய்விட் டோம். யுவான்ஷி-காய்- சீன தேசத்துக் குடியரசுத் தலைவர்காயாக இருந்தவர் பழுத்துக் கொண்டு வருகிருர். பூர்வ ராஜ வம்சத்தை ஒழிப்பதற்குப் பகீரத ப்ரயத்தனங்கள் செய்து சீன தேசத்தார் குடியரசு நாட்டினர்கள். யுவான்-ஷி-காயின் ப்க்கம் ஸேன பலம் இருந்தபடியால் அந்தக் குடியரசுக்கு இவர் தலைமை பெறுதல் சுலபமாயிற்று. காட்பட காட்பட, வெகு சீக்கிரத்தில், யுவான் மனதில் குடியரசைவிட ராஜாதிகாரமே சீனத்துக்குப் பொருந்திய ஏற்பாடாகுமென்று உதயமாயிற்று. உலகத் தாரெல்லாம் இவர் தாமே ராஜாவாகிவிட கினைப்பதாக நிச்சயித் தனர். இப்போது பழைய குமார ராஜாவுக்கு அவருடைய பெண்ணே மணஞ்செய்து கொடுப்பதாக வதந்தி ஏற்படுகிறது. எனவே சீன தேசத்துக் குடியரசு இன்னும் எவ்வளவு காலம் ஜீவித்திருக்குமென்பதை நமது தேசத்து ஜோதிடர்கள் கண்டு பிடித்துச் சொல்லும்படிக் கேட்டுக் கொள்ளுகிறேன். அதன் ஜாதக விவரங்கள் சொல்லவேண்டுமானலும் சொல்லுகிறேன். மேற்படி குடியரசுக்கு உச்சஸ்தானத்திலே ராகு இருக்கிருன். இரண்டாமிடத்திலே சனி. சனி சப்பாணியென்ற விஷயம் ஸகலருக்கும் தெரியும். மற்றக் கிரகங்களெல்லாம் வக்கிரக்தான். இதற்கு நானே தீர்மானம் சொல்லிவிடக் கூடும். ஆனால், எனக்கு ஜோதிடத்திலே அரிச்சுவடி கூடத் தெரியாது. 朱 家 ※ செய்யூரிலிருந்து பூர் மாதவய்யா ஒரு கிழவருடைய விவாகத்தின் சம்பந்தமாக எழுதியிருந்த கடிதம் சில தினங்களின் முன்னே சுதேசமித்திரனி'ல் பிரசுரஞ் செய்யப்பட்டிருந்தது. கிழவருக்கு வயது 70 ; அவருடைய தாயார் இன்னும் உயி ராடிருக்கிருள். அந்தப் பாட்டிக்கு வயது 98. இந்தத் தாயாருக்கும் தமக்கும் உபசாரங்கள் செய்யும் பொருட்டுக் கிழவர் ஒரு பதினறு வயதுக் குமரியை மணஞ் செய்து கொள்ளப் போகிருராம். இதே கிழவரிடம் இதைத் தவிர இன்னும் 31 குமரிகளின் ஜாதகம் வந்திருப்பதாகத் தெரிகிறது. கடைசியாக ஒருவாறு தீர்மானஞ் செய்திருக்கிற பெண்ணினுடைய தகப்பர்ை.