பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 பாரதி தமிழ் கற்பிக்கும் பாடசாலையொன்றிலே சேர்ந்து, சில மாதங்கள் படித் தேன். பிரம்ம ஸமாஜத்தாரின் உபதேசி'களில் ஒருவகை வெளியேற வேண்டும் என்பது என்னுடைய நோக்கம். அப்பால் அங்கிருந்து பஞ்சாப், ஹிந்துஸ்தானம் முதலிய பல பிரதேசங் களில் யாத்திரை செய்து கொண்டு, கடைசியாகச் சென்னப் பட்டணம் வந்து சேர்ந்தேன். நான் ஹிந்து மார்க்கத்தை விட்டு நீங்கியதாக எண்ணி எனது ஜாதியார் என்னேப் பல விதங்களில் இம்சை செய்தார்கள். இந்த இம்சைகளினல் எனது சித்தவுறுதி நாளுக்கு நாள் பலம் அடைந்ததேயல்லாமல், எனக்கு மனச் சோர்வு உண்டாகவில்லை. எனது தகப்பனர்-இவர் பெயர் துபாஷ் ராமச்சந்திர நாயுடு-வெளிவேஷ மாத்திரத்தில் சாதாரண ஜனங்களின் ஆசார விவகாரங்களே வைத்துக் கொண்டிருந்தார் ; எனினும், உள்ளத்தில் பிரம்மஸமாஜப் பற்று உடையவர். ஆதலால், நான் வாஸ்தவமான பரமாத்ம பக்தியும், ஆத்ம விசுவாஸமும், எப்போதும் உபநிஷத்துக்கள் படிப்பதில் சிரத்தை யும் கொண்டிருப்பது கண்டு, அவருக்கு அக்தரங்கத்தில் மிகுந்த உவகையுண்டாயிற்று. வெளி நடப்பில் என் மீது கோபம் பாராட்டுவது போலிருந்தாரே யன்றி, எனது பங்துக்கள் சொற் படி கேட்டு என்னைத் தொல்லைப்படுத்தவில்லை. ஸகல ஸெளகரியங் களும் எனக்கு முன்னேக் காட்டிலும் அதிகமாக நடக்கும்படி வீட்டில் ஏற்பாடு செய்து வைத்திருந்தார். ஆனல் எனது தமையன் மாத்திரம் என்னிடம், எக்காரணம் பற்றியோ மிகுந்த வெறுப்புப் பாராட்டினன். நான் தலையிலே பஞ்சாபிகளைப் போலப் பாகை கட்டிக் கொள்வது வழக்கம். 15 ரூபாய் 'க் குமாஸ்தாக்களுக்கென்று பிரத்தியேகமாக அழகு, அந்தம், ஆண்மை எதுவுமின்றி ஏற்பட்டிருக்கும் கும்பகோணத்துப் பாகை நான் கட்டிக் கொள்ளுவதில்லை. இது கூடத் தமையனுக்கு கோபம் உண்டாக்கும். ராஜபுத்ருடு வீடு, தொங்க விதவா ; தலலோ மகா ஆடம்பரமுக பக்டி வீடிகி!' என்று ஏதெல்லாமோ சொல்லி ஓயாமல் திட்டிக் கொண்டிருப்பான். இப்படியிருக்க, ஒருநாள் எனது தகப்பனர் திடீரென்று வாயுக் குத்தி இறந்து போய்விட்டார். அவருக்கு பிரம்மஸ்மாஜ விதிப் படி கிரியைகள் கடத்த வேண்டும் என்று கான் சொன்னேன்.