பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறில் ஒரு பங்கு 5 எனது தமையன் சாதாரண ஆசாரங்களின்படிதான் நடத்த வேண்டும் என்ருன். பிரமாத கலகங்கள் விளைந்து, கானூறு மத்தியஸ்தங்கள் நடந்த பிறகு, சமசானத்தில் அவன் தனதிஷ்டிப் படி கிரியைகள் முடித்த பின்பு நான் எனது கொள்கைப்படி பிரம்மஸ்மாஜ குரு ஒருவரை வைத்துக் கொண்டு கிரியைகள் செய்தேன். இதுவெல்லாம் எனது மாமா, ராவ் பகதூர் சுந்தர ராஜுலு நாயுடுவுக்கு என்மீது மிகுந்த கெட்ட எண்ணம் உண்டாகும்படி செய்துவிட்டது. ஆதலால், விவாகம் தடைப் பட்டுக் கொண்டே வந்தது. ஆனால், இறுதிவரை, என்னேயெப் படியேனும் சீர்திருத்தி, எனக்கே தனது மகளைப் பாணிக் கிரஹணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது அவருடைய இச்சை. வஸந்தகாலம், கிலாப்பொழுது, நள்ளிரவு நேரம். புரசை பாக்கம் முழுமையும் கித்திரையிலிருந்தது. விழித்திருந்த ஜீவன்கள் இரண்டே. ஒன்று நான், மற்ருென்று அவள். இன்பமான காற்று வீசிக் கொண்டிருந்தது. மேல் மாடத்தில் மீனம்பாளுடைய அறையிலிருந்து, முறைப்படி வீணேத்தொனி கேட்டது. ஆனால், வழக்கப்படி குறட்டை கேட்கவில்லே. ராவ்பகதூர் குறட்டை மாமா ஊரிலில்லை. வெளியே ஒரு கிராமத்துக்குப் போயிருந்தார். நான் நிலா முற்றத்தில் எனது கட்டிலின் மீது உட்கார்ந்து கொண்டிருந்தேன். என் உள்ளத் திலோ, இரண்டு எரிமலைகள் ஒன்றையொன்று சீறியெதிர்த்துப் போர் செய்து கொண்டிருந்தன. இவற்றுள்ளே ஒன்று காதல் ; மற்ருென்று-பின்பு தெரியவரும். வீணேத்தொனி திடீரென்று கின்றது. சிறிது நேரத்தில், எனது பின்புறத்தில் ஒர் ஆள் வந்து நிற்பது உணர்ந்து, திரும்பிப் பார்த்தேன், மீனம்பாள் ! இப்பொழுதுதான் நாங்கள் புதிதாகத் தனியிடத்திலே சந்தித்திருக்கிருேமென்றும், அதனால் இங்கு நீண்டதோர் காதல் வர்ணனை எழுதப்படுமென்றும் படிப்பவர்கள் எதிர்பார்க்க வேண்டாம். இவ்விதமாக காங்களிருவரும் பலமுறை சந்தித் திருக்கிருேம். மீனம்பாள் மஞ்சத்தின்மீது உட்கார்ந்தாள். மீன ! இன்று உன்னிடத்தில் ஒரு விசேஷம் சொல்லப் போகிறேன் என்றேன். எனக்கு அது இன்னதென்று