பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பாரதி தமிழ் எடுத்துத் தின்றுவிடு. தவருதே ! மேற்கண்டவாறு கட்டளை கொடுத்து விட்டுப் பராசக்தி மறைந்து போயினள். காலையில் எழுந்து அந்தப் பச்சிலேயைப் பார்க்கப் போனேன். வானத்திலிருந்து ஒரு காகம் இறங்கிற்று. அது அந்தப் பச்சிலை யைக் கொத்தி உடனே தரையில் மாண்டு விழக் கண்டேன். தேவியின் கருத்தை அறிந்து கொண்டேன். இன்று பகல் பத்து நாழிகைக்கு, அந்த இலைகளை நான் தின்று பரலோகம் சென்று விடுவேன். கின் வரவை எதிர்பார்த்து அங்கும் கன்னிகையாகவே யிருப்பேன். நீ உனது தர்மங்களை நேரே கிறைவேற்றி மாதாவுக்குத் திருப்தி செய்வித்து, பிறகு அவள் உன்னே நான் இருக்குமிடம் கொண்டு சேர்ப்பாள். போய் வருகிறேன். ராஐா! ராஜா ! என்னை மறக்காதே. வந்தே மாதரம் !

k :: ※ இக்கடிதத்தைப் படித்துப் பார்த்தவுடன் மூர்ச்சை போட்டு விழுந்து விட்டேன்.

அத்தியாயம் 3 மீனம்பாளுடைய மரணவோலை கிடைத்ததின் பிறகு இரண்டு வருஷங்கள் கழிந்துவிட்டன. இதனிடையே எனக்கு நிகழ்ந்த அனுபவங்களேயெல்லாம் விஸ்தாரப்படுத்திக் கொண்டு போனல் பெரிய புராணமாக வளரும். சுருக்கமாகச் சொல்லு கிறேன். அந்த ஆற்ருமையால் வெளியேறிய நான் அப்படியே காஷாயம் தரித்துக்கொண்டு து ற வியா க வடநாட்டிலே ஸஞ்சாரம் செய்து வந்தேன். வந்தே மாதர தர்மத்தை மட்டி லும் மறக்கவில்லை. ஆனால், என்னைச் சர்க்கார் அதிகாரிகள் பிடித்துச் சிறையிடும்படியான முயற்சிகளிலே நான் கலக்கவு மில்லை. ஜனங்களுக்குள் ஒற்றுமையும், பலமும் ஏற்படுத்தினல் ஸ்வதிந்திரம் தானே சித்தியாகும் என்பது என்னுடைய கொள்கை. காரணத்தை விட்டுப் பயனைச் சீறுவதில் என் மனம்