பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறில் ஒரு பங்கு 13 குவியவில்லை. அங்கங்கே சில சில பிரச்சாரங்கள் செய்ததுண்டு. இதுபற்றி, சில இடங்களில் என்னைப் போலீஸார் தொடரத் தலைப்பட்டார்கள். இதனால், நான் ஜனங்களிடையே நன்ருகக் கலந்து நன்மைகள் செய்துகொண்டு போகமுடியாதபடி பல தடைகள் ஏற்பட்டன. ஆகவே, எனது பிரசங்கங்களிலிருந்து எனது நோக்கத்திற்கு அனுகூலத்தினும் பிரதிகூலமே அதிகமாக விளையலாயிற்று. இதையும் தவிர, எனது பிரசங்கங்களைக் கேட்டு ஜனங்கள் மிகவும் வியப்படைவதையும், மற்றவர்களைக் காட்டிலும் எனக்கு அதிக உபசாரங்கள் செய்வதையும் கண்டு, உள்ளத்திலே கர்வம் உண்டாகத் தலைப்பட்டது. ' இயற்கையின் குணங்களிலிருந்து செய்கைகள் பிறக்கின்றன. மூடன் நான் செய்கின்றேன் என்று கருதுகின்ருன்' என்ற பகவத் கீதை வாக்கியத்தை அடிக்கடி மனனஞ் செய்து கொண்டேன். இந்த வீண்கர்வம், நாளுக்கு நாள்மிகுதி யடைந்து என்னை விழுங்கி, யாதொரு காரியத்திற்கும் பயன்படாமற் செய்துவிடுமோ என்ற அச்சம் உண்டாயிற்று. வெளிக்குத் தெரியாமல் எவருடைய மதிப்பையும், ஸம்மானத் தையும் எதிர்பார்க்காமல் ஸாதாரணத் தொண்டு இழைப்பதற்கு என்னை மாதா வைத்திருக்கிருள் என்பதை அறிந்துகொண்டேன். எனவே, பிரசங்க கூட்டங்களில் சேர்வதை நிறுத்திவிட்டேன். சில தினங்களுக்கு அப்பால், எனக்குப் போலீஸ் சேவகர்கள் செய்யும் உபசாரங்களும் கின்றுபோய் விட்டன. பாதசாரி யாகப் பல இடங்களில் சுற்றிவிட்டு, பலப்பல தொழில்கள் செய்து கொண்டு லாஹூர் நகரத்திற்குப் போய்ச்சேர்ந்தேன். அங்கே லாலா லஜபதிராய் போன்ற பலரைப் பார்க்க வேண்டு மென்ற இச்சை ஜனித்தது. அவரைப் போய்க் கண்டதில், அவர் என்னிடம் கம்பிக்கை கொண்டவராகி, கோசல நாட்டுப் பிரதேசங்களில் கொடிய பஞ்சம் பரவியிருக்கிறதென்றும், பஞ்சத்தில் கஷ்டப்படும் ஜனங்களுக்குச் சோறு துணி கொடுக்க வேண்டுமென்ற கருத்துடன் தாம் கிதிகள் சேர்த்து வருவதாக வும், பல வாலிபர்கள் தம்மிடமிருந்து திரவியங் கொண்டுபோய்ப் பஞ்சமுள்ள ஸ்தலங்களில் இருந்து உழைத்து வருவதாகவும் தெரிவித்துவிட்டு, நீரும் போய் இவ்விஷயத்தில் வேலை