பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பாரதி தமிழ் செய்யக்கூடாதா? என்று கேட்டார். ஆ ராமசந்திரன் அரசு செலுத்திய நாடு வால்மீகி முனிவர் புகழ்ந்து போற்றிய காடு ! அங்கு. ஜனங்கள் துணியும் சோறு மில்லாமல், பதியிைரக்கணக்காகத் தவிக்கிருர்கள் ! அவர்களுக்கு உதவி செய்யப் போவாயா என்று என்னேக் கேட்கவும் வேண்டுமா? அவர்களெல்லோரும் எனக்குத் தெய்வங்களல்லவா? அவர்களுக்கு வேண்டியன செய்ய முடியாவிட்டால், இந்தச் சதையுடம்பை எதன் பொருட்டாகச் சுமக்கிறேன் ? லாலாவிடம் அனுமதி பெற்றுக் கொண்டு போய்ச் சிறிது காலம், அந்தக் கடமையைச் செய்து கொண்டு வந்தேன். அங்கு கண்ட காட்சி களைப் பற்றி எழுத வேண்டுமா ? எழுதுகிறேன், கவனி. தேவ லோகத்தைப் பற்றிக் கேள்வியுற்றிருக்கிருயா ? சரி, தேவலோகம் கரகலோகமாக மாறியிருந்தால் எப்படித் தோன்றுமோ, அப்படித் தோன்றியது பகவான் ராமச்சந்திரன் ஆண்ட பூமி. நான் அங்கிருந்த கோரங்களையெல்லாம் உங்களிடம் எதற்காக விரித்துச் சொல்ல வேண்டும்? புண்ணிய பூமியைப் பற்றி இழிவுகள் சொல் வதில்ை ஒருவேளை சிறிது பாவம் உண்டாகக்கூடும். அந்தப் பாவத்தைத் தவிர வேறென்ன பயன் கிடைக்கப்போகிறது ? எழுந்திருந்து வா, பார்ப்போம். எத்தனை நாள் உறங்கி இப்படி அழியப் போகிறீர்களோ ? அட பாப ஜாதியே, பாப ஜாதியே! இது கிற்க, ஒரிரண்டு மாதங்களுக்கு அப்பால், லாலா லஜபதிராய் எங்களுக்குக் கடிதம் எழுதி, இனி அந்த வேலை போதும் என்று கட்டளை பிறப்பித்து விட்டார். கோசல நாட்டுப் பிரதேசங்களில் பஞ்சத்தின் சம்பந்தமாக கான் வேலைசெய்த சில மாதங்களில், ஏற்கெனவே என் மனதில் நெடுங்காலமாக வேரூன்றியிருந்த ஒரு சிந்தனை பலங்கொண்டு வளரலாயிற்று. தணிந்த வகுப்பினரின் நன்மை தீமைகளிலே நமது நாட்டில் உயர்ந்த வகுப்பினரென்று கூறப்படுவோர் எவ்வளவு துாரம் அசிரத்தையும், அன்னியத் தன்மையும் பாராட்டுகிருர்கள் என்பதை நோக்குமிடத்து எனது உள்ளத்தில் மிகுந்த தளர்ச்சி உண்டாயிற்று. தென்னட்டைப் போலவே வடநாட்டிலும், கடைசி வகுப்பினர் என்பதாக சிலர் கருதப் படுகின்றனர். தென்னட்டைப் போலவே வடநாட்டிலும், இந்த