பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறில் ஒரு பங்கு 15 வகுப்பினர் பெரும்பாலும் விவசாயத் தொழிலேயே கைக்கொண் டிருக்கிருர்கள். உழவுத் தொழில் உடைய இவர்கள் சாஸ்திரப் படி வைசியர்கள் ஆகவேண்டும். ஆனால், இவர்களிலே பலர் மாட்டிறைச்சி தின்பது முதலிய அனுசாரங்கள் வைத்துக் கொண்டிருப்பதால், ஹிந்துஜாதி இவர்களைத் தாழ்வாகக் கருது கின்றது. ஹிந்து நாகரிகத்திலே, பசுமாடு மிகப் பிரதானமான வஸ்துக்களிலே ஒன்று. ஹிந்துக்களின் நாகரிகம் விவசாயத் தொழிலைப் பொறுத்து கிற்கின்றது. விவசாயத் தொழிலுக்குப் பசுவே ஜீவன். ஆதலால், ஹிந்துக்கள் புராதனகால முதலாகவே கோ மாம்சத்தை வர்ஜனம் செய்து விட்டார்கள். ஒரு சிறு பகுதி மட்டும் வர்ஜனம் செய்யாதிருப்பது கண்டு ஜாதிப் பொதுமை அப்பகுதியைத் தாழ்வாகக் கருதுகின்றது. இது முற்றிலும் நியாயம். ஆனால், பஞ்சம் நோய் முதலிய பொதுப்பகைவருக்கு முன்பு, நமது உயர்வு தாழ்வுகளை விரித்துக் கொண்டு கிற்பது மடமை. தாழ்ந்த ஜாதியாரை காம் மிதமிஞ்சித் தாழ்த்தி விட்டோம். அதன் பயன்களை நாம் அனுபவிக்கிருேம். ஹிருதயமறிந்திடச் செய்திடுங் கர்மங்கள் இகழ்ந்து பிரிந்து போமோ ? ? முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும். காம் பள்ளர் பறையருக்குச் செய்ததையெல்லாம். நமக்கு அன்னிய நாடுகளில் பிறர் செய்கிரு.ர்கள். நமது சிருங்ககிரி சங்கராச்சாரியாரும் வானமாமலே ஜீயர்ஸ்வாமிகளும், கெட்டால் திரான்ஸ்வால், தேசங்களுக்குப் போவார்களானல், ஊருக்கு வெளியே சேரிகளில் வாசம் செய்ய வேண்டும். ஸாதாரண மனிதர்கள் நடக்கும் ரஸ்தாக்களில் கடக்கக்கூடாது. பிரத்யேகமாக விலகி நடக்க வேண்டும். பல்லக்குகள், வண்டிகள், இவற்றைப் பற்றி யோசனையே வேண்டியதில்லை. சுருக்கம் : நாம் நமக்குள்ளேயே ஒரு பகுதியாரை சேர்களென்று பாவித்தோம் ; இப்போது, கம்மெல்லோரையுமே உலகத்தார் மற்றெல்லா நாட்டினரைக் காட்டிலும் இழிந்த சேர்களாகக் கருதுகின்ருர்கள். நம்முள் ஒரு வகுப்பினரை காம் தீண்டாதவகுப்பினர் என்று விலக்கிைேம். இப்போது, வேத மார்க்கஸ்தர், மகம்மதியர் என்ற இரு பகுதி கொண்ட நமது ஹிந்துஜாதி முழுவதையுமே உலகம் தீண்டாத