பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பாரதி தமிழ் ஜாதி என்று கருதுகிறது. உலகத்தில் எல்லா ஜாதியாரிலும் வகுப்புக்கள் உண்டு. ஆனல் தீராத பிரிவுகள் ஏற்பட்டு ஜாதி யைத் துர்பலப்படுத்தி விடுமானல், அதிலிருந்து நம்மைக் குறை வாக நடத்துதல் அன்னியர்களுக்கு எளிதாகிறது. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.' 1200 வருஷங்களுக்கு முன்பு, வடநாட்டிலிருந்து மகம்மதியர்கள் பஞ்சாப் காட்டில் பிரவேசித்தபோது நம்மவர்களின் இமிசை பொறுக்க முடியாமல் வருந்திக் கொண்டிருந்த பள்ளர் பறையர் பேரிகை கொட்டி, மணிகள் அடித்துக் கொண்டுபோய் எதிரி களுக்கு நல்வரவு கூறி அவர்களுடன் கலந்து கொண்டதாக இதிஹாஸம் சொல்லுகின்றது. அப்போது நமது ஜாதியைப் பிடித்த நோய் இன்னும் தீராமலிருக்கிறது. பஞ்சத்தில் பெரும் பாலும் பள் பறை வகுப்பினரே மடிந்து போகிருர்கள். இதைப் பற்றி மேற்குலத்தார்கள் வேண்டிய அளவு சிரத்தை செலுத்தா மலிருக்கின்றனர். எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயப் பாதிரிகள் பஞ்சம் பற்றிய ஜனங்களுக்குப் பலவித உதவிகள் செய்து. நூற்றுக்கணக்கான மனிதர்களேயும், முக்கியமாக திக்கற்ற குழந் தைகளையும் கிறிஸ்து மதத்திலே சேர்த்துக்கொள்ளுகிருர்கள். ஹிந்து ஜனங்களின் தொகை வருஷங்தோறும் அதிபயங்கரமாகக் குறைந்து கொண்டு வருகிறது. மடாதிபதிகளும், ஸங்கிதானங் களும் தமது தொந்தி வளர்வதை ஞானம் வளர்வதாகக் கொண்டு ஆனந்த மடைந்து வருகின்றனர். ஹிந்து ஜனங்கள்! ஹிந்து ஜனங்கள்! நமது இரத்தம், நமது சதை, நமது எலும்பு, நமது உயிர்-ஹிந்து ஸ்தானத்து ஜனங்கள்-ஏனென்று கேட்பாரில்லா மல் பசிப்பிணியால் மாய்ந்து போகின்றனர். கோ மாமிசம் உண்ணுதபடி அவர்களைப் பரிசுத்தப் படுத்தி, அவர்களே நமது ஸ்மூகத்திலே சேர்த்து அவர்களுக்குக் கல்வியும் தர்மமும் தெய்வமும் கொடுத்து நாமே ஆதரிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களெல்லோரும் நமக்குப் பரிபூரண விரோதிகளாக மாறி விடுவார்கள். இந்த விஷயத்திலே எனது சிறிய சக்திக்கு இயன்றவரை முயற்சிகள் செய்ய வேண்டும் என்ற அவா எனது உள்ளத்தில் வளரலாயிற்று. வங்க நாட்டில் அசுவினி குமார தத்தர் என்ற தேச பக்தர் ஒருவர் இருப்பதாக