பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறில் ஒரு பங்கு 17 வும், அவர் அந்த பிரதேசங்களில் காமசூத்திரர்’ (பெயர் மட்டும் சூத்திரர்) என்று கூறப்படும் பள்ளர்களே ஸமூக வரம்பினுள்ளே சேர்த்து உயர்வு படுத்த முயற்சிகள் செய்வதாகவும் கேள்விப் பட்டேன். அவரைப்பார்க்க ஆசை உண்டாயிற்று. அத்தியாயம் 4 கல்கத்தாவுக்கு வந்து சில தினங்கள் இருந்துவிட்டு பாரிஸா லுக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கு போய், வழி விசாரணை செய்து கொண்டு அசுவினிகுமார தத்தருடைய வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். வீட்டு வாயிலில் ஒரு வங்காளி பாபு நின்று கொண்டிருந்தார். அவரிடம் ' அசுவினி பாபு இருக்கிருரா ?” என்று கேட்டேன். இல்லை, நேற்றுத் தான் புறப்பட்டுக் காசிக்குப் போயிருக்கிருர் ' என்ருர். ' அடடா ?' என்று சொல்லி திகைத்து கின்றேன். காஷாய உடையைக் கண்ட அந்த பாபு உபசார மொழிகள் கூறி உள்ளே அழைத்துப் போய், தாகசாந்தி செய்வித்து விட்டு, யார் எவ்விடம் என்பதை யெல்லாம் விசாரணை செய்தார். நான் எனது விருத்தாந்த மெல்லாம் தெரிவித்துவிட்டு, என் மனதிலிருந்த நோக்கத்தையும் சொன்னேன். " பாரும், பாபு, கம்மில் ஆறில் ஒரு பங்கு ஜனங்களே காம் தீண்டாத ஜாதியாக வைத்திருப்போமால்ை நமக்குஈசன் நல்ல கதி கொடுப்பாரா?' என்று என் வாயிலிருந்து வாக்கியம் கேட்டவுடனே அவர் முகத்தில் மிகுந்த வருத்தம் புலப்பட்டது. முகத்தைப் பார்த்தால் கண்ணிர் ததும்பிவிடும் போலிருந்தது. தீண்டாத வகுப்பினரின் நிலையைக் கருதித் தான் இவ்வளவு பரிதாப மடைகிருர் போலும் என்று கான் கினைத்து, " ஐயா, உம்முடைய நெஞ்சு போல் இன்னும் நூறு பேருடைய நெஞ்சு இருக்குமானல் நமது நாடு செம்மைப் பட்டுவிடும்' என்றேன். " ஸ்வாமி, தாங்கள் கினேக்கிறபடி அத்தனை கருணையுடைய நெஞ்சம் எனக்கு இன்னும் மாதா அருள்புரியவில்லை. ஹீன ஜாதி பா-2