பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

பாரதி தமிழ்

 யாரைக் காக்கவேண்டும் என்ற விஷயத்தில் எனக்கு கொஞ்சம் சிரத்தையுண்டு என்பது மெய்யே. அசுவின் பாபுவுடன் நானும் மேற்படி வகுப்பினருக்கு நன்மை செய்வதில் சிறிது உழைத்திருக்கிறேன். ஆயினும் என் முகத்தில் தாங்கள் கவனித்த துக்கக்குறி நம்மில் ஆறிலொரு பங்கு ஜனங்கள் இப்படி அவலமாய் விட்டார்களே என்பதைக் கருதி ஏற்பட்டதன்று. தாங்கள் சொன்ன வாக்கியம் சில தினங்களுக்கு முன்பு இங்கு வந்திருந்த ஒரு மந்திராஜியம்மாளின் வாயிலிருந்து அடிக்கடி வெளிவரக் கேட்டிருக்கிறேன். தாம் அது சொன்னவுடனே எனக்கு அந்த அம்மாளின் நிலை ஞாபகம் வந்தது. அவளுடைய தற்கால ஸ்திதியை நினைத்து வருத்தமுண்டாயிற்று. அடடா ! என்ன குணம்! என்ன வடிவம் இவ்வளவு பாலியத்திலே நமது தேசத்தினிடம் என்ன அபரிமிதமான பக்தி!' என்று சொல்லி திடுக்கென்று பேச்சை நிறுத்திவிட்டார். அப்பால் என் முகத்தை ஓரிரண்டு தடவை நன்றாக உற்று நோக்கினர். அவருடைய பெயர் ஸ்தீச சந்திரபாபு என்பதாக ஏற்கனவே சொல்லியிருக்கிறார்.

" ஸதீச் பாபு, ஏன் இப்படிப் பார்க்கிறீர்?' என்று கேட்டேன். 'ஸ்வாமீஜி, க்ஷமித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் ஸந்யாஸி. எந்த தேசத்தில் பிறந்தவரென்பதைக்கூட நான் இன்னும் தெரிந்துகொள்ளவில்லை. ஆயினும், உங்கள் முகத்தைப் பார்க்கும் பொழுது, அதில் எனக்கு அந்த யுவதியின் உருவம் கலந்திருப்பது போலத் தோன்றுகிறது. உங்களிருவருடைய முகமும் ஒன்று போலிருப்பதாக நான் சொல்லவில்லை. உங்கள் முகத்தில் எப்படியோ அவளுடைய சாயல் ஏறியிருப்பதுபோலத் தோன்றுகிறது' என்றார்.

மதராஸ் பக்கத்து யுவதியென்று அவர் சொன்னவுடனேயே என் மனதில் ஏதோ ஒருவிதமான பதைபதைப்பு உண்டாயிற்று. அதன் பின்னிட்டு, அவர் சொல்லிய வார்த்தைகளைக் கேட்ட வுடன், அந்த பதைபதைப்பு மிகுதியுற்றது. ஸ்ந்யாசி உடை தரித்து இருந்தேன். நெடுநாளாகத் துறவையே ஆதரித்து வந்தி

  • மந்திராஜியம்மாள் என்பது மதராஸ் பிரதேசத்து ஸ்திரி என்று பொருள்படும். மதராஸ் என்பதற்கு வடநாட்டார் மந்த்ராஜ் என்பார்கள்.* மந்திராஜியம்மாள் என்பது மதராஸ் பிரதேசத்து ஸ்திரி என்று பொருள்படும். மதராஸ் என்பதற்கு வடநாட்டார் மந்த்ராஜ் என்பார்கள்.