பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறில் ஒரு பங்கு 19 ருக்கிறேன். வேஷத்திலென்னடா இருக்கிறது, கோவிந்தா, வேஷத்திலென்ன இருக்கிறது ? ' மீனம்பா ? - அட, போ ! மீனம்பாள் இறந்துபோய் இரண்டு வருஷங்களுக்கு மேலாகிறதே ? . . . . . . ஐயோ, எனது கண்மணி என்ன கஷ்டத்துடன் இறந்தாள் ? . . . . . . ” என்பதாக ஒரு கூடிணத்திலே மனப்பேய் ஆயிரம் விதமாகக் கூத்தாடிற்று. ' ஸ்தீச பாபு, நானும் மதராஸ் பக்கத்திலே ஜனித்தவன் தான். நீர் சொல்லிய யுவதியைப் பற்றிக் கேட்கும்போது, எனக்குத் தெரிந்த மற்ருெரு பந்துவைப் பற்றி ஞாபகம் வருகிறது. நீர் சொல்லிய பெண் யார் ? அவள் பெயரென்ன ? அவள் இப்போது எங்கே இருக்கிருள் ? அவள் இங்கே என்ன நோக்கத்துடன் வந்திருந்தாள் ? அவளுடைய தற்கால ஸ்திதியைக் குறித்து உமக்கு வருத்தமுண்டாவதேன்? அவளுக்கு இப்போது என்ன கஷ்டம் நேரிட்டிருக்கிறது? எனக்கு எல்லாவற்றையும் விவர மாகத் தெரிவிக்க வேண்டும் ' என்றேன். கதையை விவரிக்கத் தொடங்கினர் ஸதீச சந்திர பாபு. ஒவ்வொரு வாக்கியமும் என் உள்ளத்திலே செந்திக் கனலுள் இரும்புத் துண்டுகளை எறிவது போல விழுந்தது. அவர் சொல்லிய கதையினிடையே என்னுள்ளத்தில் நிகழ்ந்தனவற்றையெல்லாம் இடையிட்டுக் கொண்டு போனல் படிப்பவர்களுக்கு விரஸ்மா யிருக்கும் என்று அஞ்சி, இங்கு அவர் சொல்லிய விஷயங்களை மட்டிலும் குறிப்பிடுகிறேன். என் மனத் ததும்புதல்களை படிப்பவர்கள் தாமே ஊகத்தாற் கண்டு கொள்ளவேண்டும். ஸ்தீச பாபு சொல்லலாயினர்: " அந்த யுவதிக்குத் தாஞ்சோர். ' அவள் பெயர் எனக்குத் தெரியாது. நாங்கள் எல்லோரும் அவளை தின மாதா என்ற பெயர் சொல்லி அழைப்போம். அவளுடைய உண்மைப் பெயர் அசுவினி பாபுவுக்கு மாத்திரந்தான் தெரியும். ஆனல், அந்த தேவியின் சரித்திரத்தை எங்களுக்கு அசுவினி பாபு அடிக்கடி சொல்லியிருக்கிருர். அதை உம்மிடம் சொல்லுகிறேன், கேளும் : அவள் ஒரு போலீஸ் பென்ஷன் உத்தியோகஸ்தருடைய குமாரியாம், அவளது அத்தை மகனாகிய ஒரு மந்த்ராஜ் நகரத்து வாலிபனுக்கு அவளே விவாகம் செய்து கொடுக்க வேண்டுமென்று