பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பாரதி தமிழ் தீர்மானம் செய்யப்பட்டிருந்ததாம். அவ்வாலிபன் வந்தே மாதரம் கூட்டத்திலே சேர்ந்து விட்டான். அதிலிருந்து, அவள் தகப்பன் அவளே வேருெரு போலீஸ் உத்தியோகஸ்தனுக்கு மணம் புரிவிக்க ஏற்பாடு செய்தான். கடைசித் தருணத்தில், அவள் கனவில் ஏதோ தெய்வத்தின் கட்டளை பெற்று ஒரு பச்சிலேயைத் தின்றுவிடவே, அவளுக்கு பயங்கரமான ஜ்வர நோய் கண்டு விவாகம் தடைப்பட்டுப் போய்விட்டது. அப்பால், தகப்பனரும் இறந்து போய்விட்டார். இதனிடையே அவளுடைய காதலளுகிய மந்த்ராஜ் வாலிபன், என்ன காரணத்தாலோ, அவள் இறந்து விட்டதாக எண்ணி, ஸ்க்யாஸம் வாங்கிக் கொண்டு வெளியேறி விட்டானும். ' ' ஏழை மனமே, வெடித்துப் போய் விடாதே. சற்றுப் பொறு ' என்று என்னல் கூடிய வரை, அடக்கிப் பார்த்தேன். பொறுக்க முடியவில்லை. ' ஐயோ மீன மீன ' என்று கூவினேன். பிறகு 'ஸ்தீச பாபு, அவளுக்கு இப்போது என்ன கஷ்டம் கேரிட்டிருக்கிறது ? சொல்லும், சொல்லும் ' என்று நெரித்தேன். ஸ்தீச சந்திரருக்கு உளவு ஒருவாறு துலங்கிவிட்டது. “ இப்போது ஒன்றுமில்லை. செளக்கியமாகத்தானிருக்கிருள் ' என்ருர். இல்லை இல்லை. என்னிடம் நீர் உண்மை பேசத் தயங்குகிறீர். உண்மை தெரிந்தால் கான் மிகத் துன்பப்படுவேன் என்று எண்ணி நீர் மறைக்கிறீர். இதுவே என்னே நரக வேதனைக்கு உட்படுத்துகிறது. சொல்லிவிடும் சொல்லிவிடும் ' என்று வற்புறுத்தினேன். மறுபடியும் ஸ்தீச பாபு ஏதோ பொருளற்ற வார்த்தைகளைப் போட்டுக் குழப்பி எனக்கு ஸமாதான வசனம் சொல்லத் தலைப் பட்டார். 'பாரத தேவியின் ஹிருதயத்தின் மீதும், பகவத்கீதையின் மீதும் ஆணையிட்டிருக்கிறேன். என்னிடம் உண்மையை ஒளியாமற் சொல்லும் ' என்றேன். இந்த ஸத்தியம் நவீன வங்காளத்தினரை எவ்வளவு தூரம் கட்டுப்படுத்தும் என்பது எனக்குத் தெரியும். இங்ங்ணம் நான் ஆணையிட்டதிலிருந்து,