பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை தமிழ் உரைநடையின் வளர்ச்சி ஒரு மொழி தோன்றிய காலத்தில் உரைநடையே பேச்சு வழக்கில் இருந்திருக்க வேண்டும். ஆனல் அச்சுப்பொறி உரு வாகாத பழங்காலத்தில் மக்கள் எடுத்துக் கூறிய அனுபவங்களை யும், கதைகளையும், கூறியவாறே உரைநடையில் எழுதி வைக்கக் கூடிய வசதி இருக்கவில்லை. ஒலைச் சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதக் கற்றுக் கொண்ட நாளிலும் கவிதைகளைப் போல உரைநடையை எழுதி வை ப் ப .ெ த ன் ப து எளிதன்று. கருத்துச் செறிவு கொண்ட கவிதைகளே எழுதுவதும், அவற்றை மனப்பாடம் செய்வதும், உரைநடையோடு ஒப்பு நோக்கும்போது, எளிதாகவே தோன்றியிருக்கும். ஆகவேதான் கவின்த முதலில் உ ரு வா கி கிலேபெற்றது. மிகப் பழங்காலத்திலேயே மொழி கன்கு வளர்ச்சியுற்றுத் திட்டவட்டமான இலக்கணம் பெற்ற தமிழ் மொழிக்கும் இது பொருந்தும். எட்டாம் நூற்ருண்டில் எழுதப்பெற்ற இறையனர் களவியல் உரையே நமக்குக் கிடைத்துள்ள முற் கா ல த் தமிழ் உரை ந ைட க் கு முதல் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இரண் டொரு நூற்ருண்டுகளுக்குப் பின்னர் தொல்காப்பியத்திற்கும் பத்துப்பாட்டிற்கும் உரை எழுதப் பலர் முன்வந்தனர். இளம்பூரணர், பேராசிரியர், நச்சினர்க்கினியர், பரிமேலழகர், சேனவரையர், அடியார்க்கு கல்லார் போன்ற பல அறிஞர்கள் சிறந்த நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்கள். இவர்கள் 13-ஆம் நூற்ருண்டிற்கும் 16-ஆம் நூற்ருண்டிற்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் வாழ்ந்தவர்கள். உரையாசிரியர்கள் விளக்க உரை அவர்கள் எழுதியவாறே நமக்குக் கிடைத்துள்ளன என்றும் கூற இயலாது. செவி வழி யாகப் பலர் கேட்டுப் பிறகு ஓலைச்சுவடிகளில் எழுதியுள்ளனர் என்று கொள்வதே பொருத்தமாகப் படுகிறது. உரைநடையை விரிவாக எழுத முடியாத நிலையில் இவ்வுரை யாசிரியர்கள் கவிதையைப் போலவே செறிவுள்ள ஓர் உரைநடை