பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 பாரதி தமிழ் களுக்குத் தெளிவாகத் தெரியும். தமிழர்களெல்லோரும் பெரும் பாலும் ஹனுமந்த கட்டத்திற்கே போய் இறங்குவதுண்டு. அங்கு கீழ்மேற் சந்து ஒன்றிருக்கிறதல்லவா ? அதில் கீழ்மேற்கு மூலையிலிருந்து மூன்ரும் வீடு. அந்த வீட்டிற்கு சிவமடம் என்று பெயர். யாத்திரைக்காரர்கள் போய் இறங்கக்கூடிய வீடுகளைக் காசியிலே மடங்கள் என்கிருர்கள். சிவமடத்தில் போய் இறங்கி ஸ்நானம் செய்துவிட்டு, மடத்தார் கொடுத்த ஆகாரத்தை உண்ட பிறகு, அப்பொழுதே அந்த மடத்துப் பிள்ளைகளில் ஒருவரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு கர்வா கட்டத்திற்கு போனேன். அங்கே, ஜெய்ப்பூர் ராஜா பங்களா எது என்று விசாரித்து, பங்களாவிற்குப் போய்ச் சேரும்போது இரவு ஏழு மணியாகி விட்டது. வாயிலில் ஒரு குதிரைவண்டி வந்து கின்றது. அந்த வண்டி புறப்படுந் தருவாயில் இருந்தது. வண்டியின்மேல் ஆங்கி லேய உடைதரித்த ஒரு வங்காளி உட்கார்ந்து கொண்டிருந்தார். வண்டிப் பக்கத்திலே ஒரு கிழவரும் வேறு சிலரும் கின்று கொண்டிருந்தார்கள். அசுவினி குமாரதத்தரின் படத்தை நான் பல இடங்களில் பார்த்திருக்கிறபடியால், அந்தக் கிழவர்தான் அசுவினி பாபு என்று தெரிந்துகொண்டேன். நான் போன வுடனே, அசுவினி பாபு பக்கத்திலிருந்த மனிதனே நோக்கி, 'யாரோ ஒரு ஸ்க்யாசி வந்திருக்கிருர். ' அவரைத் தாழ்வாரத்தில் வரச்சொல். நான் இதோ வருகிறேன் என்ருர் ” தாழ்வாரத்தில் போட்டிருந்த இரண்டு நாற்காலிகளில் கானும் என்னுடன் வந்தி ருந்த வாலிபனும் போய் உட்கார்ந்தோம். அசுவினி பாபுவும் வண்டிக் குள்ளிருந்தவரும் பேசியது என் செவியில் நன்ருக விழுந்தது. அசுவினி பாபு : “டாக்டர் ஸாஹப்! நேற்றைக் காட்டிலும் இன்று சிறிது குணப்பட்டிருப்பதாகவே எனக்குத் தோன்று கிறது, தமது கருத்தென்ன ? ' டாக்டர் : மிகவும் துர்ப்பல கிலேயிலேதான் இருக்கிருள். இன்னும் இருபத்துநான்கு மணி நேரம் இருப்பது கஷ்டம். அந்த கேரம் தப்பினால், பிறகு விபத்தில்லை. ” காதில் விஷந்தடவிய தீயம்புபோல இந்த வார்த்தை கேட்டது ; ' மீன மீன l ' என்று அலறினேன். வண்டி புறப்பட்டு