பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறில் ஒரு பங்கு 23 விட்டது. அதற்குள், நான் என்னே மீறி அலறிய சத்தம் கேட்டு, அசுவினி பாபுவும் அவரைச் சேர்ந்தவர்களும் நான் இருந்த பாரிசமாக விரைந்து வந்தார்கள். அவர் வருதல் கண்டு நான் மனதை ஒருவாறு தேற்றிக் கொண்டு எழுந்து கின்று வணங்கினேன். அவர், ' ஸ்வாமிக்கு எவ்விடம்? இங்கு வந்த கருத்தென்ன ? ஏன் சத்தம் போட்டீர்கள்?' என்று ஹிந்துஸ் தான் பாஷையிலே கேட்டார். ' பாபு. கான் ஸ்க்யாவியல்ல. நான் திருடன், நான் மஹா நிர்பாக்கியமுடைய பாவி. மீனம்பாள் தம்மிடம் கோவிந்த ராஜன் என்ற பெயர் சொல்லியிருப்பாளல்லவா ? அந்தப் பாவி கான்தான்' என்றேன். உடனே அவர் என்னே மேன்மாடத்திலுள்ள ஒரு அறைக்குத் தனியாக அழைத்துச் சென்ருர். அங்கு என்னை நோக்கி, 'கேற்றெல்லாம் கான் உம்மை அடிக்கடி நினைத்துக் கொண்டி ருந்தேன். நீர் இங்கு வரக்கூடும் என்ற சிந்தனே எனக்கு அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது ' என்ருர். பிறகு என்னிடம் ' கிழக்கு முகமாகத் திரும்பி உட்காரும் ” என்ருர். அப்படியே உட்கார்ந்தேன். கண்ணே மூடிக்கொள் ளும் ' என்ருர். இரண்டு கண்களையும் மூடிக்கொண்டேன். பிறகு எனது நெற்றியை கையாலே தடவி எதோ முணு முணுத்துக் கொண்டிருந்தார். எனக்கு உறக்கம் வருவது போலிருந்தது. அடடா ! இன்னும் மீனம்பாளைப் பார்க்கவில்லை. எனது உயிரினுமினியாள் மரணுவஸ்தையிலிருக்கிருள். அவளைப் பார்க்கும் முன்பாக உறக்கம் வருகிறதே. இவர் என்னே ஏதோ மாயமந்திரத்துக்கு உட்படுத்துகிருர். எனது பிராண ரத் தினத்தைப் பார்க்காதபடி கெடுத்துவிட முயலுகிருர். இந்த மாயைக்கு உட்படலாகாது. கண் விழித்து எழுந்து கின்றுவிட வேண்டும் ' என்று சங்கற்பம் செய்துகொண்டு, எழுந்து கிற்க முயன்றேன். ' ஹாம்" என்ருெரு சத்தம் கேட்டது! விழித்து விழித்துப் பார்க்கிறேன் ; கண்ணேத் திறக்க முடியவில்லை. மயக்கம் மேன்மேலும் அதிகப்பட்டது. அப்படியே உறங்கி விழுந்துவிட்டேன். விழித்த பிறகு, நான் இரண்டு நாள் உறங்கிக் கிடந்ததாகத்