பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறில் ஒரு பங்கு 35 லாம் நீங்கிப்போய் மிகுந்த தெளிவும் செளக்கியமும் அமைந்தி ருக்கக் கண்டேன். ' இப்பொழுது என்ன சொல்லுகிருய்? புறப்பட்டுப் போகி ருயா ' என்று அசுவினி பாபு புன்னகையுடன் கேட்டார். ' அவளே ஒரு முறை பார்த்துவிட்டு, அவளிடம் விடை பெற்றுக் கொண்டு செல்லுகிறேன் ” என்றேன். திடீரென்று அசுவினி பாபுவின் முகத்தில் இருந்த புன்னகை மாறி சிரத்தா ரூபம் தோன்றியது. அப்பால் என்னிடம், "மகனே, நீ மீளும்பாளை மணஞ் செய்து கொள்வாய். நீங்களிருவரும் சேர்ந்து வாழ்ந்து, முற்காலத்தில் ரிஷியும் ரிஷிபத்தினியுமாக வேத யக்ஞம் செய்ததுபோல, உங்கள் வாழ்நாள் முழுதும் மாதா வின் ப்ரீத்யர்த்தமாக ஜீவயக்ஞம் புரியக்கடவீர்கள் ' என்ருர். ' காளி தேவியின் கட்டளை என்னுகிறது? ; என்று கேட் டேன். இந்த ஜன்மத்தில் நீ கோவிந்த ராஜனே மணஞ் செய்து கொள்ளலாகாது ' என்று காளிதேவி மீனுளுக்குக் கூறி, அவளே விஷம் தின்னும்படியாகக் கட்டளையிட்ட செய்தியை அவருக்கு நினைப்புறுத்தினேன். - அதற்கு அவர், அந்தச் செய்தியை யெல்லாம் நான் அறிவேன். மஹாசக்தியின் கட்டளையை மீனம்பாள் நன்கு தெரிந்து கொள் ளாமல் உனக்குக் கடிதம் எழுதிவிட்டாள். மீனம்பாளுடைய ஜன்மம் மாறுபட வேண்டுமென்று அம்மை சொல்லியதன் பொருள் வேறு. அவள் பச்சிலே தின்னும்படி கட்டளையிட்டது மீனம்பாளுக்கு ஜ்வரமுண்டாகி தந்தை எண்ணிய விவாகம் தடைப்படும் பொருட்டாகவே. அதற்கு முன்பு அவளுடைய ஜன்மம் வேறு ; அதற்கப்பால் அவளுடைய ஜன்மம் வேறு. மாதா தெளிவாகத்தான் சொல்லினள். ஆனால், மீனம்பாள் தனக்கு வேண்டாத ஒருவனுடன் விவாகம் கடக்கப் போகிறது என்ற தாபத்தால் படபடப்புண்டாகி, உனக்கு ஏதெல்லாமோ எழுதிவிட்டாள். நீயும் அவசரப்பட்டு, காஷாயம் தரித்துக் கொண்டு விட்டாய். உனக்கு ஸங்யாசம் குருவினல் கொடுக்கப் படவில்லை. ஆயினும் இது வெல்லாம் உங்களிருவருடைய கலத்தின் பொருட்டாகவே ஏற்பட்டது. உங்களிருவருக்கும், பரிபூரணமான ஹிருதய சுத்தி உண்டாவதற்கு இப்பிரிவு