பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சும்மா 1 நேற்று சாயங்காலம் நான் தனியாக மூன்ருவது மெத்தையில் ஏறி உட்கார்ந்தேன். நான் இருக்கும் வீட்டில் இரண்டாவது மெத்தையிலிருந்து மூன்ரும் மெத்தைக்கு ஏணி கிடையாது. குடக்கூலி வீடு. அந்த வீட்டுச் செட்டியாரிடம் படி (ஏணி) கட்டும்படி எத்தனையோ தரம் சொன்னேன். அவர் இன்றைக் காகட்டும், நாளேக்காகட்டும் என்று நாளைக் கடத்திக்கொண்டு வருகிருர். ஆதலால் மூன்ரும் மெத்தைக்கு ஏறிப்போவது மிகவும் சிரமம். சிறிய கைச்சுவர் மேல் ஏறிக்கொண்டு அங்கிருந்து ஓர் ஆள் உயரம் உந்தவேண்டும். மூன்ருங் கட்டின் சுவரோரத்தைக் கையால் பிடித்துக் கொண்டு கைச்சுவர் மேலிருந்து உந்தும்போது கொஞ்சம் கை வழுக்கி விட்டால் ஒன்றரை ஆள் உயரம் கீழே விழுந்து மேலே காயம்படும். நான் தனிமையை விரும்புவோன். ஆதலால், சிரமப்பட்டேறி அடிக்கடி மூன்ருங் கட்டிலே போய் உட்கார்ந்திருப்பது வழக்கம். இந்த மார்கழி மாதத்தில் குளிர் அதிகமானபடியால் வெயில் காய்வதற்கும் அது ஹிதமாம். இங்ங்னம் நேற்று மாலை நான் வெயில் காய்ந்து கொண்டிருக்கை யிலே குள்ளச் சாமியாரும் வேணு முதலியும் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் இரண்டாங்கட்டு வெளி முற்றத்தில் வந்து கின்று கொண்டு என்னேக் கைதட்டிக் கூப்பிட்டார்கள். நான் இறங்கி வரும் பொருட்டாக வேஷ்டியை இடுப்பில் வரிந்து கட்டினேன். அதற்குள் குள்ளச் சாமியார் என்னை நோக்கி 'நீ அங்கேயே இரு, நாங்கள் வருகிருேம் ' என்று சொன்னர். இந்தக் குள்ளச் சாமியாரைப் பற்றி முன்னொரு முறை எழுதி யிருப்பது ஞாபகமிருக்கலாம். இவர் கலியுக ஜடபரதர், மஹா ஞானி, ஸர்வpவ தயாபரன். ராஜயோகத்தால் மூச்சைக்கட்டி ளுஆகிற மஹான். இவர் பார்ப்பதற்கு பிச்சைக்காரன் போல