பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சும்மா 31 அவ்வளவு நீண்ட கதையை இத்தனை காயிதப் பஞ்சமான காலத்தில் ஏன் சொல்லப் புறப்பட்டீர் என்ருலோ அது போகப் போக ஆச்சர்யமான கதை. அற்புதமான கதை இதைப் போலே கதை நான் இதுவரை எழுதினது கிடையாது. நான் வேறு புத்தகங்களிலே படித்ததும் கிடையாது. நீங்கள் கேட் டால் ஆச்சர்யப்படுவீர்கள். எழுந்துகூகூகூ என்று கூவி ஆடிப் பாடிக் குதிக்கத் தொடங்குவீர்கள். நான் கேட்கத் தகாத அற் புதத்தைக் கேட்டேன். காணத்தகாத அற்புதத்தைக் கண்டேன். ஆதலால் உலகத்திலே இதற்கு முன் எழுதப்பட்ட கதைகள் எல்லாவற்றிலும் அற்புதத்திலும் அற்புதமான கதையை உங்க ளுக்குச் சொல்லப் புறப்பட்டேன். ஆனல் இந்த வியாஸம் நீண்டு போய் விட்டது; அடுத்த பாகத்தில் தானே சொல்ல முடியும். நான் வாக்குத் தவறமாட்டேன். இரண்டாம் பாகம் சீக்கிரம் உங்களுக்குச் சொல்லுகிறேன். கொஞ்சம் பொறுமையுடன் இருங்கள். 2 அப்போது குள்ளச் சாமியார் சொல்லுகிருர் :-' கேள் தம்பி, நான் சும்மா இருக்கும் கrயைச் சேர்ந்தவன். நீ சொல்லியபடி ஸ்க்யாளிகள் சும்மா இருந்ததினல் இந்தத் தேசம் கெட்டுப் போகவில்லை. அதர்மம் செய்ததினல் நாடு சீர் கெட்டது. ஸங்யாளிகள் மாத்திரம் அதர்மம் செய்யவில்லை. இல்லறத்தார் அதர்மம் தொடங்கியது துறவறத்தாரையும் சூழ்ந்தது. உண்மையான யோகிகள் இன்னும் இந்த தேசத்தில் இருக்கிருர் கள். அவர்களாலே தான் இந்த தேசம் ஸர்வ நாசமடைந்து போகாமல் இன்னும் தப்பிப் பிழைத்திருக்கிறது. இப்போது பூமண்டலம் குலுங்கிப் பல ராஜ்யங்களும் சரிந்து கொண்டிருக் கையிலே ஹிந்து தேசம் ஊர்த்வ முகமாக மேன்மை நிலையை நோக்கிச் செல்லுகிறது. தானும் பிழைத்தது. உலகத் தையும் உஜ்ஜீவிக்கும்படி செய்யலாம் என்ற தைரியம் ஹிந்து தேசத்தின் மனதில் உண்டாயிருக்கிறது. இதற்கு