பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ví பாரதி தமிழ் யைக் கையாண்டார்கள். அடியார்க்கு கல்லார் தாம் எழுதிய சிலப்பதிகார உரையில், பதிகத்தின் முதல் இரண்டு வரிகளுக்கு மிக விரிவாக உரை எழுதிவிட்டு, இவ்வாறு விரிவாக எழுதுவது இயலாதாகையால் மற்றப் பகுதிக்குச் சுருக்கமாகவே எழுதுவ தாகக் கூறியுள்ளதும் இங்கு நோக்கத்தக்கது. சிலப்பதிகாரத்தில் செய்யுள்களுக்கிடையிலேயே உரைநடை விரவி வருதலையும் காணலாம். சங்கப் புலவரில் ஒருவரான பாரதம் பாடிய பெருந்தேவனர் தமது நூலைப் பெரும்பாலும் வெண்பாவிலும் ஆங்காங்கு அகவற்பாவிலும் பாடிவிட்டு இடை யிடையே உரைகடையையும் கையாண்டிருக்கிருர். ஆனல் இவற்றையெல்லாம் தமிழ் உரைநடைக்கு எடுத்துக்காட்டுகளாக கொள்வது சரியல்ல. அக்காலத்தில் உருவான உரைநடை கமக்கு எந்த நிலையில் கிடைத்திருக்கிறது என்பதை மட்டும் இவை காட்டுகின்றன எனக் கொள்ளலாம். - இடைக் கர்லத்தில் சமணப்பெரியார்கள் சிலர் வடமொழி கலந்த மணிப்பிரவாள நடையில் எழுதினர் என்று நீபுராணம், சத்திய சிந்தாமணி முதலான நூல்களிலிருந்து அறிய முடிகின்றது. வைணவ உரையாசிரியர்களும், நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திற்கு மணிப்பிரவாள நடையில் அமைந்த விரிவான உரைநடை விளக்கம் தங்துள்ளார்கள். சைவ சமயப் புலவர்களும் சைவ சித்தாந்த நூல்களுக்கு உரைநடை கண்டிருக்கிருர்கள். பொதுவாகக் கூறுமிடத்து இவற்றையெல்லாம் தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ள முடியாது. அச்சு எந்திரம் உருவாகி இந்தியாவில் அது பயன்படுத்தப்பட்டதிலிருந்துதான் உரைநடை வளர்ச்சியுற்றதென்று கூறலாம். தனித்த உரைகடை நூல்கள் அதன் பின்னரே மலரத் தொடங்கின. கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்கான விவிலிய நூல் தமிழ் உரை நடையில் மொழி பெயர்க்கப்பட்டது. 13-ஆம் நூற்ருண்டிற்கும் 16-ஆம் நூற்ருண்டிற்கும் இடைப் பட்ட காலப்பகுதியிலேயே கல்வெட்டுகளின் மூலம் தமிழ் உரை கடை மற்ருெரு வகையில் வளர்ச்சியுற்றது என்ருலும் கல் தச்சர் கள் தமிழறிவு பெரிதும் வாய்க்கப் பெருதவர்களாக இருந்தமை காரணமாக அவர்கள் கல்லில் பொறித்த உரைநடை பெரும்பாலும்