பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பாரதி தமிழ் முன் இப்படி எத்தனையோ ப்ரளயங்களில் இருந்து தப்பிற்று. சில தினங்களுக்கு முன்பு ஜகதீச சந்திரவ்ஸு கல்கத்தா வில் தம்முடைய நவீன சாஸ்த்ராலயத்தை பிரதிஷ்டை செய்யும்போது என்ன சொன்னர்- வாசித்துப் பார்த்தாயா ? ' பாபிலோனிலும், நீல நதிக்கரையிலும் இருந்த நாகரீகங்கள் செத்து மறு ஜன்ம மடைந்து விட்டன. ஹிந்துஸ்தானம் அன்று போலவே இன்னும் உயிரோடிருக்கிறது. ஏனென்ருல் எல்லா தர்மங்களிலும் பெரிய தர்மமாகிய ஆத்ம பரித்யாகம் இந்த தேசத்தில் சாகாதபடி இன்னும் சிலரால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது ' என்று ஜகதீச சந்திர வஸ சொன்னர். இங்ங்னம் குள்ளச் சாமியார் சொல்லி வருகையில் வேணு முதலி ' சாமியாரே! உமக்கு இங்கிலிஷ் தெரியுமா ? நீர் பத்திரிகை வேறே வாசிக்கிறீரா? ஜகதீச சந்திர வஸ்- பேசிய விஷயம் உமக்கெப்படித் தெரிந்தது?" என்று கேட்டான். அப்போது குள்ளச் சாமியார் சொல்லுகிருர் : “ அநாவசியக் கேள்விகள் கேட்காதே. நான் சொல்வதைக் கவனி : ஹிந்து தேச்த்தினுடைய ஜீவனே யுக யுகாந்தரங்களாக அழியாதபடி பாதுகாத்து வருவோர் அந்த யோகிகளே. கடுரமான கலியில் உலகம் தலை கீழாகக் கவிழ்ந்து போகும் சமயத்தில் கூட ஹிந்து ஸ்தானம் அழியாமல் தானும் பிழைத்து மற்றவர்களையும் காக்கக் கூடிய ஜீவ சக்தி இக்காட்டிற்கு இருப்பது அந்த யோகிகளின் தபோ பலத்தாலன்றி வேறில்லை. ஹா. ஹா, ஹா, ஹா! பல விதமான லேஹ்யங்களைத் தின்று தலைக்கு நூறு நூற்றைம்பது பெண்டாட்டிகளே வைத்துக் கொண்டு தடுமாறி, நாள் தவருமல் ஒருவருக்கொருவர் காய்களைப் போல அடித்துக் கொண்டு ஹிமய மலேக்கு வட புறத்திலிருந்து அன்னியர் வந்தவுடனே எல்லாரும் சரச் சுவர் போல இடிந்து விழுந்து ராஜ்யத்தை அன்னியர் வசமாகத் தந்த உங்கள் ராஜாக்களுடைய வலிமையில்ை உங்கள் தேசம் பிழைத்திருக்கிறதென்று கினைக்கிருயா? போது விடிங் தால் எவன் செத்துப் போவான், ஸபண்டீகரணம், பிராமணுர்த்த போஜனங்கள் பண்ணலாம் என்று சுற்றிக் கொண்டு, வேத மந்திரங்களைப் பொருள் தெரியாமல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்த உங்கள் பிராமணமர்களால் இந்த தேசம் சாகாத