பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருள் 3? மிகுந்த என் காட்டையும் விட்டு விட்டு உன்னுடன் வருவதில் எனக்கு ஸம்மதமில்லை. இங்கிருந்து போய்விடு' என்ருன். மறை குரல் கொல்லென்று சிரித்தது. " நான் எப்போது கொண்டு போகப்படுவேன்?' என்று திட சித்தன் கேட்டான். " விடியும் ஒரு ஜாமத்திற்குள்ளே ” என்று குரல் சொல்லிற்று. இது கேட்ட மாத்திரத்திலே திடசித்தன் அயர்ந்து போனன். கண்கள் முன்னிலும் அதிகமாகச் சுழன்றன. நெஞ்சு முன்னி லும் விரைவாக அடித்தது. கால்கள் பதறலாயின. அப்போது அவனுடைய தாய் சொல்லிக்கொண்டிருந்த மந்திர மொன்று கினைப்பு வந்தது. உடனே உச்சரித்தான். தாய் இறந்து போகும் சமயத்தில் அவனே அழைத்து அந்த மந்திரத்தை அவன் காதிலே உபதேசம் செய்துவிட்டு, "மகனே, உனக்கு எவ்வளவு பெரிய ஆபத்து வந்த சமயத்திலும் இம்மந்திரத்தை உச்சரித்தால் விலகிப் போய்விடும் ' என்று சொல்லியிருந்தாள். இப்போது அதனை உச்சரித்தான். ' கரோமி ' (செய்கிறேன்) என்பதே அம்மந்திரம். கரோமி, கரோமி” என்று மூன்றுதரம் சொன்னன். காலிலே ஒரு பாம்பு வந்து கடித்தது. " தாயே, உன் மந்திரத்தின் பயன் இதுதான ?' என்று அலறின்ை. " அஞ்சாதே, மந்திரத்தைச் சொல்லு, மந்திரத்தைச் சொல்லு, மந்திரத்தைச் சொல்லு' என்று அசரீரி வாக்குப் பிறந்தது. இந்தப் புதிய வாக்கைக் கேட்கும்போது அவனுடைய தாயின் குரலைப் போலேயிருந்தது. கரோமி, கரோமி, கரோமி, செய்கிறேன், செய்கிறேன், செய்கிறேன் என்று மறுபடி ஜபிக்கலானன். ' குரு, குரு, குரு" (செய், செய், செய்) என்றது அசரீரி. உடனே மூச்சை உள்ளே இழுத்து அமானுஷிகமான வேகத் துடன் கைகளே உதறினன். கைத்தளேகள் படீரென்று நீங்கின. உடைவாளையெடுத்தான். " செய், செய், செய்' என்று மறுபடி சத்தம் கேட்டது. பாம்பு கடித்த கால்விரலைப் பளிச்சென்று வெட்டி எறிந்து விட்டான். குரு, குரு, குரு என்ற சத்தம்