பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பாரதி தமிழ் தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான்; சாத்திரம் வளருது: குத்திரங் தெரியுது: மந்திரம் பெருகுது; தந்திரம் வளருது ; மந்திரமெல்லாம் வளருது; வளருது ! குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு, சொல்லடி, சொல்லடீ, மலையாள பகவதி. அந்தரி, வீரி, சண்டிகை, குலி , குடுகுடு குடுகுடு' இப்படி அவன் சொல்லிக் கொண்டு போவதை நான் மெத்தை யிலிருந்துகேட்டேன். இதென்னடா புதுமையாக இருக்கிறதென்று ஆச்சரியத்துடன் அவனே கிற்கச் சொன்னேன். கின்ருன். கீழே இறங்கிப் போய், அவனே ஸ்மீபத்தில் அழைத்து ' எந்த ஊர் ” என்று கேட்டேன். ' சாமி, குடுகுடுக்காரனுக்கு ஊரேது. காடேது? எங்கேயோ பிறந்தேன். எங்கேயோ வளர்ந்தேன். எங்கெல்லாமோ சுத்திக் கொண்டு வருகிறேன்” என்ருன். அப் போது நான் சொன்னேன் : " உன்னைப் பார்த்தால் புதுமையாகத் தெரிகிறது. சாதாரணக் கோணங்கிகளைப் போலில்லை. உன்னுடைய பூர்வோத்தரங்களைக் கூடிய வரையில் ஸ்விஸ்தாரமாகச் சொல்லு. உனக்கு நேர்த்தி யான சரிகை வேஷ்டி கொடுக்கிறேன் ' என்றேன். அப்போது, குடுகுடுக்காரன் சொல்லுகிருன் : “ சாமி, நான் பிறந்த இடங் தெரியாது. என்னுடைய தாயார் முகம் தெரியாது. என்னுடைய தகப்பருைக்கு இதுவே தொழில். அவர் கெற்குப் பக்கத்தைச் சேர்ந்தவர். ஒன்பது கம்பளத்தார் ' என்ற ஜாதி. எனக்குப் பத்து வயதாக இருக்கும் போது தஞ்சாவூருக்கு என் தகப்பனர் என்னே அழைத்துக் கொண்டு போனர். அங்கே வைகுரி கண்டு செத்துப்போய் விட்டார். பிறகு நான் இதே தொழிலில் ஜீவனம் செய்து கொண்டு பல தேசங்கள் சுற்றி ஹைதராபாத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். அப்போது எனக்கு வயது இருபதிருக்கும். அங்கே ஜான்ஸன் என்ற துரை வந்திருந்தான். நல்ல மனுஷ்யன். அவன் ஒரு கம்பெனி ஏஜெண்டு. இந்தியாவிலிருந்து தாசிகள், கட்டுவர், கழைக் கூத்தாடிகள், செப்பிடு வித்தைக்காரர், ஜாலக் காரர் முதலிய பல தொழிலாளிகளைச் சம்பளம் கொடுத்துக்