பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேப்பமரம் 49 தெரிந்துகொண்டேன். உடம்பு மாறவில்லை. உடம்பு மாறின லென்ன, மாருவிட்டாலென்ன ? நான் உடம்பில்லை. நான் ஆத்மா. நான் போதம்; நான் அறிவு. திடீரென்று வேப்பமரச் சித்தம் மாறிப்போய் எனக்குள் மனுஷ்ய சித்தம் சமைந்து விட்டது. மனுஷ்ய சித்தம் ஏற்பட்டாலன்றி மனித பாஷை பேசவருமா? கோடி ஜன்மங்களில் நாம் பெற்றிருக்க வேண்டிய பயனே அந்த முனிவர் எனக்கு ஒரே கணத்தில் அருள் செய்தார். எனக்கேற் பட்ட ஆனந்த மிகுதியால் என் பூக்களேயும், இலைகளையும் கணக் கில்லாமல் அவருடைய பாதத்தின்மீது வர்ஷித்தேன். அவர் மிகவும் மகிழ்ச்சி பூத்தவராய், ஏ, வேப்பமரமே, நேற்றிரவு நானும் தாமிரபரணியும் இங்கு ராமகதியில் ஜலக்கிரீடை செய்து கொண்டிருந்த காலத்தில் நீ பார்த்துப் பெரும்.கிழ்வெய்திப் பல ஆசிர்வாதங்கள் கூறினய். அதை நான் ஞானதிருஷ் டியால் உணர்ந்தேன். அப்பால், சிறிது நேரத்துக்கு முன்பு கான் யோக ஸ்மாதியிலிருந்தபோது இந்தப் பாம்பு வரு வதைக் கண்டு நீ என்னைக் காக்க விரும்பி என்னே எழுப்பும் பொருட்டாக என்மீது கின் இலைகளையும் பூக்களையும் சொரிங் தாய். இங்ங்னம் நீ என்னிடம் காட்டிய அன்பிற்குக் கைம்மா ருக உனக்கு நான் ரிஷிபோதம் கொடுக்கிறேன். இதல்ை உனக்கு ஸ்கல ஜந்துக்களின் பாஷைகளிலும் சிறந்த ஞானம் இயல்பாகவே உண்டாகிவிடும். எல்லா ஐந்துக்களிடத்திலும் ஸ்மமான பார்வையும் ஸ்மமான அன்பும் உண்டாகும். எல்லா உயிர்களிடத்திலும் தன்னேயே காண்பதாகிய தேவ திருஷ்டி ஏற்படும். இவற்ருல் நீ ஜீவன் முக்தி பெறுவாய்' என்ருர். அது முதல் கான் அவர் கூறிய சக்தி களெல்லாம் பெற்று, யாதொரு கவலையுமில்லாமல் யாதொரு பயமுமில்லாமல் ஜீவன் முக்தி பதமடைந்து வாழ்ந்து வருகிறேன் ' என்று வேப்ப மரம் சொல்லிற்று. உடனே நான் அந்த வேப்ப மரத் தடியில் ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணினேன். ' உனக் கென்ன வேண்டும்?' என்று கேட்டது. அப்போது நான் அந்த வேப்ப மரத்தை நோக்கி, "உனக்கெப்படி அகஸ்தியர் குருவோ அப்படியே நீ எனக்கு குரு. அந்த முனிவர் உனக் கருள் புரிந்த ஜீவன் முக்தி பதத்தை நீ எனக்கருள் புரிய Lur–4