பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. காந்தாமணி ' காக்தாமணி, உங்கப்பா பெயரென்ன?' என்று பாட்டி கேட்டாள். ஒரு கிணற்றங்கரையில் கடந்த ஸங்கதி. கோடைக் காலம்; காலை வேளை. வானத்திலே பால ஸாரியன் கிரணங்களை ஒழிவில்லாமல் பொழிந்து விளையாடுகிருன். எதிரே நீல மலை, பச்சைமரங்கள், பசுக்கள், பல மனிதர், சில கழுதைகள், இவற் றின் தொகுதி கின்றது. வெயிலொளி எந்தப் பொருள் மீது பட்டாலும் அந்தப் பொருள் அழகுடையதாகத் தோன்றுமென்று ஷெல்லி என்ற ஆங்கிலக் கவிராயன் சொல்லுகிருன். எனக்கு எந்த நேரத்திலும் எந்தப் பொருள்களும் பார்க்க அழகுடையன வாகத் தோன்றுகின்றன. ஆளுல் காலே வேளையில் மனிதக் கூட்டத்தில் கொஞ்சம் உற்சாகமும், சுறுசுறுப்பும் அதிகமாகக் காணப்படுவதால் அப் போது உலகம் மிகவும் சந்தோஷகரமான காட்சியுடையதா கிறது. தோட்டத்துக்கு நடுவே ஒரு கிணறு. அத்தோட்டத்தில் சில அரளிப்பூச் செடிகள், சில மல்லிகைப்பூச் செடிகள், சில ரோஜாப்பூச் செடிகள். அக் கிணற்றிலிருந்து அதற்கடுத்த வீதியிலுள்ள பெண்களெல்லாரும் ஜலம் எடுத்துக் கொண்டு போவார்கள். இந்தக் கதை தொடங்குகிற அன்று காலேயில் அங்குக் காந்தாமணியையும் பாட்டியையும் தவிர ஒரு குருட்டுக் கிழவர் தாமே ஜலமிறைந்து ஸ்நானத்தைப் பண்ணிக்கொண்டிருந்தார். போலீஸ் உத்தியோகத்திலிருந்து தள்ளுபடியாகி அதிலிருந்து அந்தக் கிராமத்துக்கு வந்து தமது வாழ்நாளின் மாலைப் பொழுதை ராமநாமத்தில் செலவிடும் பார்த்தசாரதி அய்யங்கார் அங்குப் பக்கத்திலே கின்று கிழவியைக் குறிப்பிட்டு பார்த்துக் கொண்டிருந்தார். மேற்படி கிணற்றுக்கருகே ஒரு குட்டிச்சுவர். அதற்குப்