பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii பாரதி தமிழ் தரச மஞ்சரி என்ற உரைநடை நூலே எழுதிய வீராசாமி செட்டி யார் ஆவார். மாயூரம் வேதநாயகம் பிள்ளே அவர்கள் பிரதாப முதலியார் சரித்திரம் (1876) என்ற நகைச்சுவைமிக்க நூலே இயற்றினர். இதுவே தமிழில் வந்த முதல் புதினம் என்று பாராட்டப் பெறுகிறது. இவர் சுகுணசுந்தரி (1887) என்ற மற்ருெரு நூலையும் இயற்றியுள்ளார். வேதநாயகம் பிள்ளையின் உரைநடை நேருக்கு கேர் பேசுவது போன்ற தன்மையைக் கொண்டது. ராஜம் ஐயர் (1872-1898) கமலாம்பாள் சரித்திரம் என்ற சிறந்த புதினத்தை எழுதியிருக்கிருர், இவரைத் தொடர்ந்து மாதவையா பத்மாவதி சரித்திரம் (1898) என்ற புதினத்தையும் வேறு இரண்டு புதினங்களேயும், குசிகர் குட்டிக் கதைகள் என்ற பல சிறு கதைகளையும், சிறந்த முறையில் எழுதினர். தாமோதரம் பிள்ளை அவர்கள் சூளாமணி வசனம் என்ற நூலை அருஞ் சொற்களைக் கொண்ட நடையில் எழுதியிருக்கிருர். சூரிய நாராயண சாஸ்திரியாரும் தமது மதிவாணன் கதை என்ற நூலை உயர் நடையில் எழுதினர். வேறு சில நூல்களும், நாடகங்களும் இவர் படைப்பாகும். இல்லாண்மை என்ற நூலும் தமிழ் காவலர் சரிதை என்ற நூலும் இயற்றிய திரு. கனகசுந்தரம் பிள்ளே அவர்கள் யாழ்ப் பாணத்தில் பிறந்தவராவார். 20-ஆம் நூற்ருண்டு தொடங்கிய பின்னரே தமிழில் உரை கடை நூல்கள் மிகப் பரவலாகப் பல துறைகளையும் தழுவி வெளி வரலாயின. மறைமலையடிகள் அழகான தனித் தமிழில் உரை கடை நூல்களே எழுதலானர். திரு. வி. கல்யாணசுந்தர முதலியார் ஒரு நல்ல தமிழ் உரைகடையைத் தமது பேச்சிலும் எழுத்திலும் கையாண்டு தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய அழகு தந்தார். இவர் எழுதிய தமிழ் உரைநடை நூல்கள், கட்டுரைகளின் தொகுப்புகள், மிகப் பலவாகும். இவர் கடத்தி வந்த நவசக்தி என்ற வார இதழும் தமிழ் உரைகடை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிற்று என்று கூறலாம். பண்டிதமணி கதிரேசச் செட்டியார், காவலர் சோமசுந்தர பாரதியார், வேங்கடசாமி காட்டார் முதலியவர்கள் தமிழில் உயர்