பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தாமணி 53 செவேலென்று எலுமிச்சம் பழத்தைப் போலிருப்பார். இவர் நரைத்த கிழவரன்ருே ? எங்கப்பா சின்னப்பிள்ளை ' என்று காந்தாமணி உரைத்தாள். அப்போது போலீஸ் பார்த்தசாரதி அய்யங்கார் காந்தா மணியை நோக்கி : உங்கப்பாவுக்கு எந்த ஊரிலே வேலை ? ' என்று கேட்டார். " எங்கப்பா சங்கரநாதன்கோயில் சப்இன்ஸ்பெக்டர் ' என்று காந்தாமணி சொன்னாள். பார்த்தசாரதி அய்யங்கார் தலையைக் கவிழ்த்துக் கொண்டார். அவருக்கு "சப்இன்ஸ் பெக்டர்' என்ற பெயர் பாம்புக்கு இடி போல். அப்போது காந்தாமணிக்கும் பாட்டிக்குமிடையே பின்வரும் சம்பாஷணை கிகழலாயிற்று. 'நீங்கள் அக்கா, தங்கை எத்தனே பேர் 2 ” என்று பாட்டி கேட்டாள். அப்போது காந்தாமணி சொல்கிருள்: எங்கக்கா வுக்குப் பதினெட்டு வயது. போன மாசந்தான் திரட்சி நடந்தது; பூநீவைகுண்டத்திலே. எனக்கு அடுத்த மாசம் திரட்சி. என் தங்கை ஒரு பெண் திரள கிற்கிறது. நாங்கள் மூன்று பேரும் பெண்கள். எங்கப்பாவுக்குப் பிள்ளைக் குழந்தை இல்லையென்று தீராத மனக்கவலே. என்ன செய்யலாம்? பெருமாள் அதுக்ரஹம் பண்ணிலைன்ருே தாழ்வில்லை? அதற்காக அவர் சோதிடம் பார்த் தார். எங்கம்மாவுக்கு இனிமேல் ஆண் குழந்தை பிறக்காதென்று பாழாகப் போவான் ஒரு ஜோதிடன் சொல்லிவிட்டான். அதை முத்திரையாக முடித்துக்கொண்டு இந்த அறுதலிப் பிராமணன் எங்கப்பா, அடுத்த மாசம் மன்னர்கோயிலில் ஒரு பெண்ணே இளையாளாகக் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிரு.ர். முகூர்த்த மெல்லாம் வைத்தாய் விட்டது ' என்ருள். " மன்னர்கோவிலில் உங்கப்பாவுக்குப் பெண் கொடுக்கப் போகிற மாமருைடைய பெயரென்ன?’ என்று அந்தப் பாட்டி கேட்டாள். அதற்குக் காந்தாமணி : “ அவர் பெயர் கோவிந்த ராஜய்யங்காராம். அந்த ஊரிலே அவர் பெரிய மிராசாம். அவருக்கு ஒரே பெண்தானம். கால் முதல் தலே வரை அந்தப் பெண்ணுக்கு வயிர நகை சொரிந்து கிடக்கிறதாம். தேவரம்பை யைப்போல் அழகாம் அந்தப் பெண்” என்ருள்.