பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பாரதி தமிழ் " அப்படிப்பட்ட அழகான பணக்கார இடத்துப் பெண்ணே இளையாளாகக் கொடுக்கக் காரணமென்ன?’ என்று பாட்டி கேட் டாள். அந்தப் பெண் திரண்டு மூன்று வருஷங்களாய்விட்டன. அதன் தாயும் இறந்துபோய்விட்டாள். அதன் நடையுடை பாவனை களெல்லாம் ஐரோப்பியர் மாதிரி. ஆதலால் இதுவரை அதற்குக் கல்யாணத்துக்கு யாரும் வரவில்லே. எங்கப்பா அந்த ருதுவான வார்த்தையெல்லாம் வீண் பொய்யென்று சொல்லித் தாம் கல்யா ணம் பண்ணிக் கொள்ள ஸம்மதப்பட்டுவிட்டார். மேலும் இவருக்கு மனதுக்குள்ளே சந்தோஷந்தான். தமக்கு ருதுவான பெண் கிடைப்பது பற்றி. இன்றைக்குக் காலேயிலே கூட அவரும் எங்கம்மாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். காங்கள் இந்த ஊர்ச் சத்திரத்திலேதான் ஒரு வாரமாக இறங்கியிருக்கிருேம். எங்கப் வும், அம்மாவும் பேசிக் கொண்டிருந்தபோது அம்மா சொன்னாள்: " மன்னர்குடிப் பெண் திரண்டு மூன்று வருஷமாய் விட்டதாக இந்த ஊரிலே கூடப் பலமான பிரஸ்தாபம். ஆண், பெண் எல் லோரும் ஒரே வாக்காகச் சொல்லுகிருர்கள் ' என்ருள். அப்பா அதற்கு : 'வெர்மைன்ட். அந்தக் குட்டி திரண்டிருப்பதைப் பற்றி நமக்கு இரட்டை சந்தோஷம். நமக்குப் பணம் கிடைக்கும். ஆண் பிள்ளை பிறக்கும். குட்டி ஏராளமான அழகு. இந்த மாதிரி இடத்திலே ஐ டோன் கேர், எ டேம் எபெளட் சாஸ்திரங்கள், காம் சாஸ்திரங்களைப் புல்லாக மதிக்கிருேம்' என்ருர்..... ' என்று காந்தாமணி சொன்னுள். இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கிற சத்தம் என் காதில் விழுந்தது. என்னுடைய பார்வை முழுவதும் போலீஸ் பார்த்தசாரதி ஐயங்கார் மேல் கின்றது. அவரைப் பார்த்துக் கொண்டிருக்கையிலே என் மனதில் திடீரென்று ஒரு யோசனை பிறந்தது. அங்கிருந்தவர்களில் எனக்குக் காந்தாமணியின் முகந்தான் புதிது. பார்த்தசாரதி ஐயங் காரையும் தெரியும்; அந்தக் கிழவியையுந் தெரியும். அந்தக் கிழவி அய்யங்கார்ச்சியில்லை; ஸ்மார்த் தச்சி. அந்தக் கிராம முன்சீபின் தங்கை. அவளுக்கும் போலீஸ் பார்த்தசாரதி அய்யங்காருக்கும் பால்யத்தில் பலமான காதல் நடை பெற்று வந்ததென்றும், அதனால் போலீஸ் பார்த்தசாரதி