பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தாமணி 55 அய்யங்காருக்கும் மேற்படி கிராம முன்சீபுக்கும் பல முறை யுத் தங்கள் நடந்தனவென்றும், அந்த யுத்தங்களிலே ஒன்றின்போது தான் பார்த்தசாரதி அய்யங்காருக்கு ஒரு கண்ணில் பலமான காயம்பட்டு அது பொட்டையாய் விட்டதென்றும் நான் கேள்விப் பட்டதுண்டு. அந்தக் கேள்வியையும் மனதில் வைத்துக் கொண்டு இப்போது மேற்படி ஸ்திரீகளின் ஸம்பாஷணையின்போது மேற்படி அய்யங்காரின் முகத்தில் தோன்றிய குறிப்புகளையும் கவனித்த விடத்தே என் மனதில் பின்வரும் விஷயம் ஸ்பஷ்டமாயிற்று. கிழவியினிடத்தில் பழைய காதல் தனக்கு மாருமல் இன்னும் தழல் வீசிக்கொண்டிருக்கிறதென்ற செய்தியை அய்யங்கார் கிழவியி னிடம் ஸ்திரப்படுத்திக் காட்ட விரும்புகிருரென்றும், காந்தாமணி முதலிய யுவதிகளின் அருகே கூடத் தனக்கு அக் கிழவியின் வடிவே அதிக ரம்மியமாகத் தோன்றுகிறதென்றும் உணர்த்த விரும்புகிரு ரென்றும் தெரியலாயின. ஆனல் அவருடைய முகக் குறிப்பு களிலே பாதி பொய் நடிப்பென்பதும் தெளிவாகப் புலப்பட்டது. ஏனென்ருல், காந்தாமணியையும் அக்கிழவியையும் ஒருங்கே தன் கையால் படைத்து, இருவருக்கும் பிதாவாகிய பிரமதேவன் கூடக் காந்தாமணியின் ஸ்ங்கிதியில் அந்தக்கிழவியைப் பார்க்கக் கண் கூசுவான். அப்படியிருக்கக் கிழவியின்மீது அங்கு காதற் பார்வையை அசைவின்றி நிறுத்த முயன்ற போலீஸ் பார்த்த சாரதி அய்யங்காரின் முயற்சி மிகவும் நம்பக்கூடாத மாதிரியில் கடைபெற்று வந்தது. இந்த ஸங்கதியில் மற்ருெரு விசேஷமென்ன வென்ருல் மேற்படி அய்யங்காரை நான் விருகூடி மறைவிலிருந்து கவனித்துக் கொண்டு வந்தது போலவே காந்தாமணியும், கிழவியும் அவரை அடிக்கடி கடைக்கண்ணுல் கவனித்துக் கொண்டு வந்தார்கள். பெண்களுக்குப் பாம்பைக் காட்டிலும் கூர்மையான காது, பருங் தைக்காட்டிலும் கூர்மையான கண். எனவே பார்த்தசாரதி அய்யங்காருடைய அகத்தின் நிலைமையை நான் கண்டது போலவே அந்த ஸ்திரிகளும் கண்டு கொண்டனரென்பதை அவர்களுடைய முகக் குறிகளிலிருந்து தெரிந்து கொண்டேன். என்னே மாத்திரம் அம்மூவரில் யாரும் கவனிககவில்லை. நான் செடிகொடிகளின் மறைவில் நின்று பார்த்தபடியால்