பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தாமணி 57 பூநீநிவாலாசாரியார் என்பவருக்கு விவாகம் செய்து கொடுத்து விட்டார். இந்த நீங்வாஸாசாரியாருடன் வாழக் காந்தா மணிக்குச் சம்மதமில்லை. இந்தச் செய்தியெல்லாம் எனக்குப் பின்னிட்டுத் தெரிய வந்தது. அன்று கிணற்றங்கரையில் என் கண்முன்னே கடந்த விஷ யத்தை மேலே சொல்லுகிறேன். காந்தாமணி குடத்தை இடுப் பில் வைத்துக் கொண்டு, ' எங்கம்மா வைவாளே, நான் என்ன செய்வேனம்மா ! ' என்று அழுதுகொண்டே போனள். ஆனல் அவள் தன்னுடைய தாய் தந்தையர் இருந்த சத்திரத்திற்குப் போகவில்லை. நேரே, அந்த ஊருக்கு மேற்கேயுள்ள நதிக்குப் போனள். தாகத்துக்கு நீர் குடித்த பின்பு மலையாளியும் அந்த ஆற்றங்கரையை நோக்கிச் சென்ருன். இதற்குள்ளே எனக்கு ஸங்தியாவந்தன காலம் நெடுந்து ரம் தவறிவிட்டபடியால் நான் அந்தக் கிணற்றடியை விட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அன்று மாலை என் வீட்டுக்கு மேற்படிக் கிராமத்து வாத்தியார் சுந்தர சாஸ்திரி வந்தார். வந்தவர் திடீரென்றுகேட்டீர்களோ விஷயத்தை வெகு ஆச்சரியம்! வெகு ஆச்க்ரியம் ! என்று கூக்குரலிட்டார். ' என்ன ஒய் ஆச்சரியம் ? கடந்ததைச் சொல்லிவிட்டுப் பிறகு கூக்குரல் போட்டால் எனக்குக் கொஞ்சம் ஸெளகர்யமாக இருக்கும் ' என்றேன். ' சத்திரத்திலே சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி அய்யங்கார் சங்கரநாதன் கோவிலிலிருந்து வந்து இறங்கியிருக்கிருரோ, இல்லையோ ? அவர் ஒரு பெண்ணையும் கூட்டிக்கொண்டு வந்தார். அவருடைய மகள், அந்தக் குட்டி வெகு அழகாம். திலோத்தமை, ரம்பையையெல்லாம் இவளுடைய காலிலே கட்டி அடிக்கவேண்டுமாம். அதற்குப் பெயர் காந்தா மணியாம். சொல்லுகிறபோதே நாக்கில் ஐலம் சொட்டுகிறது. காந்தாமணி, காந்தாமணி, என்ன நேர்த்தியான காமம். ரஸம் ஒழுகுகிறது. . . . . . . . * 3 இங்ங்னம் ஸுரந்தர சாஸ்திரி காந்தாமணியை வர்ணித்துக் கொண்டு போவதை நான் இடையே மறித்து : “ மேலே நடந்த சரித்திரத்தைச் சொல்லும் ' என்றேன். " அந்தக் காந்தாமணியைக் காணவில்லையென்று விடியற் காலமெல்லாம் தேடிக் கொண்டிருந்தார்கள். இப்போதுதான்