பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பாரதி தமிழ் அம்பாசமுத்திரத்திலிருந்து ஒரு தந்தி கிடைத்ததாம். இன்று பகல் 8 மணிக்கு மேற்படி காக்தாமணியும், ஒரு மலையாளப் பையனும் கிறிஸ்தவக் கோவிலில் விவாகம் செய்து கொண்டார் களென்று அந்தத் தந்தி சொல்லுகிறதாம் ' என்ருர், சில தினங்களுக்கப்பால் மற்ருெரு ஆச்சரியம் கடந்தது. கிராமத்து மாஜிப் போலீஸ் சேவகர் கரைத்த தலைப் பார்த்தசாரதி அய்யங்காரும், அன்று கிணற்றங்கரையில் அவருடைய காதற் பார்வைக்கிலக்காயிருந்த கிழவியும் ரங்கூனுக்கு ஒடிப் போய் விட்டார்கள். பின்னிட்டு அந்தக் கிழவி தலை வளர்த்துக் கொண்டு விட்டாளென்றும் பார்த்தசாரதி அய்யங்காரும் அவளும் புருஷனும் பெண்சாதியுமாக வாழ்கிருர்களென்றும் அய்யங்கார் அங்கொரு நாட்டுக்கோட்டைச் செட்டியிடம் வேலை பார்த்துத் தக்க சம்பளம் வாங்கிக் கொண்டு rேமமாக வாழ்கிருரென்றும் ரங்கூனிலிருந்து செய்தி கிடைத்தது.