பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. உஜ்ஜயிநீ ' கண்ணே, நாம் சக்தி தர்மத்தைக் கைக்கொண்டோம். நமக்கு நீ சக்தி. நீ இறந்தால் நான் உடன் கட்டை ஏறுவேன் என்று விக்கிரமாதித்த ராஜன் தன்னுடைய ப்ரியதனமாகிய புரீமுகியினிடம் சொன்னன். அப்போது அவள் உஜ்ஜயிே புரத்து மாகாளி அருளாலே உனக்கு ஆயிரம் வயதுண்டு. அப்படி ஆயிரத்தில் ஒன்று குறைய நானும் இருப்பேன்' என்ருள். ' எனக்கு வயது தொளாயிரத்துத் தொன்னுற்ருென்பது தான் போலும்! "என்று விக்கிரமாதித்தன் பெருமூச்சு விட்டான். அப்பொழுது ரீமுகி சொல்லுகிருள்: " காந்தா, நீ எனது குமாரன். என் சொற்படி கேள். தர்மம் பெண்ணுல் ஏற்படுத்தப்பட்டது. விரதம், தவம், பூஜை, ஆஹாரம், வீடு, பள்ளிக்கூடம் அனைத்தும் ஏற்படுத்திக் கொடுத்தது பெண். தர்மம் பெண்ணுல் உண்டானது. பெண் தாய், பெண்ணேத் தன்னில் பாதியென்று கருதாமல், தனக்கு அது பகுதிப்பட்டிருக்கவும் வேண்டும். ஆனல் தான் அதைத் தன் பகுதி யாகத் தாகை, நோக்கவும் மாட்டேன் என்று ஆண் நெடுங்கால மாகச் சொல்லி வருகிறது. அதற்காகப் பெண் பழி வாங்குகிறது. ஆணேப் பழி வாங்கி அந்தத் துயரத்தில் தானும் மடிகிறது. " சிவன் பாதி, சக்தி பாதி போலச் சரி பாதியாக எப்போது ஆண் பெண்ணே ஒப்புக் கொள்கிறதோ, அப்போது ஆணுக்குப் பெரிய வலிமை சித்திக்கிறது. கலியுக முடிவில் இது fமுற்றிலும் பரிபூரணமாக கிகழும் ' என்ருள். " அப்போது நமது மஹாகாளி தேவிக்கு காமமென்ன ?” என்று விக்கிரமாதித்தன் கேட்டான். அப்போது ரீமுகி சொல்லுகிருள்" அப்போது மஹாகாளி தேவிக்கு நித்ய கல்யாணி உஜ்ஜயிே என்று பெயர் ’