பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. கடல் ஒரு நாள் மாலையில் நான் வேதபுரம் கடற்கரையில் தனி யிடத்தில் மணல் மேலே போய்ப்படுத்துக் கொண்டிருந்தேன். பகலில் நெடுந்து ரம் கடந்த இளைப்பினல் அப்படியே தூங்கிப் போய்விட்டேன். அந்தத் தூக்கத்திலே கண்ட கனவை எழுதுகிறேன். கடுக்கடலில் ஒரு தீவு ; அதனிடையே பெரிய அரண்மனை. அரண்மனைக்கருகே சிங்காரத் தோட்டம். அதில் ஒரு நீரோடை , அதனருகே புல்லாந்தரைமேல் பதினறு வயதுள்ள ஒரு கன்னிகை உட்கார்ந்திருந்தாள். அவள் என்னேக் கண்ட மாத்திரத்தில் எழுந்து அரண்மனைக்குள் ஒடிப்போய்விட்டாள். நான் அவ் வழியைப் பின் தொடர்ந்து சென்றேன். போகிற வழியில் ஒரு பெரிய பாம்பு கிடந்தது. என்னேக் கண்டவுடன் படத்தைத் தூக்கி என்மேலே பாய்ந்து கடிக்க வந்தது. நான் ஒடினேன். அது என்னேத் துரத்திக் கொண்டு வந்தது, ஒடியோடிக் கடற் கரைக்கு வந்து சேர்ந்தேன். பாம்பு காலுக்கு மிகவும் சமீபமாக வந்தது. கடலுக்குள்ளே குதித்தேன். கடலிலே புயற்காற்று ஒரலேயைத் தூக்கி மூன்று பனேயளவு தூரம் மேலே எறிகிறது. மற்ருேரலே மூன்று பனேயளவு பள்ளத்தில் வீழ்த்துகிறது. எப்படியோ சாகாமல் அந்த அலைக்குத் தப்பிவிட்டேன். நெடு நேரத்துக்கப்பால் அலை அடங்கிற்று. நான் ச்ேசை விடவில்லை. எப்படியோ ந்ேதிக் கொண்டு வருகிறேன். ஆனல் கரை தென்பட வில்லை, பிறகு கைகளில் கோவுண்டாயிற்று. என்னல் ந்ேத முடியவில்லை. என்னுடைய குலதெய்வத்தின் பெயரை உச்சரித் தேன். அங்கே ஒரு கிழவன் தோணி விட்டுக் கொண்டு வந்தான். "அண்ணே, அண்ணே, என்னே உன்னுடைய தோணியில் ஏற்றிக் கொள்ளு. கான் புயற்காற்றில் அடிபட்டு மிகவும் நொந்துபோ யிருக்கிறேன்' என்று சொன்னேன். அவன் தனது தோணியில் ஏற்றிக் கொண்டான். தோணியை விட்டுக் கொண்டு கடலிலே