பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 பாரதி தமிழ் போகிருேம், போகிருேம், வழி தொலையவேயில்லை, "அண்ணே, கரை சேர இன்னும் எத்தனை காலம் செல்லும் ? ' என்று சொன்னேன். அந்தக் கிழவன் தின்பதற்குக் கொஞ்சம் அரிசி மாவும், ஒரு மிடறு தண்ணிரும் கொடுத்தான். இளைப்பாறி அப்படியே கண்ணயர்ந்தேன். (கனவுக்குள்ளே ஒரு துரக்கம்) கொஞ்சம் ஆயாசம் தெளிந்தவுடனே கண்ணே விழித்துப் பார்த் தேன். கரை தெரிந்தது. கிழவன் என்னேக் கரையிலிறக்கிவிட்டு, மறுபடி தனது தோணியைக் கடலிலே செலுத்திக்கொண்டு போனன். நான் அவனிடம் எதெல்லாமோ கேள்வி கேட்டேன். அவன் ஒன்றுக்கும் மறுமொழி சொல்லவில்லை. கண்ணுக் கெட்டும் வரை அவன் தோணியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மறுபடி அந்தத் தீவுக்குள் கொஞ்ச தூரம் போனவுடனே பழைய அரண்மனே தெரிந்தது. அதனருகே சிங்காரத் தோட்டம், அதே நீரோடை. அந்தப் பெண்ணும் முன்போலவே புல்லாங் தரைமேல் உட்கார்ந்து கொண்டிருக்கிருள். என்னேக் கண்டவுடன் மறுபடி எழுந்து தன் வீட்டை கோக்கி ஓடினள். நான் தொடர்ந்து போகவில்லை. தொடர்ந்து போனல் முன்போலவே வழியில் பாம்பு கிடக்குமென்று கினைத்து மிகவும் பயங்கொண்டவய்ை, அதிவேகமாகக் கடற்கரையை கோக்கி ஓடிச் சென்றேன். ஒடும் போதே பாம்பு துரத்திக் கொண்டு வருகிறதா என்று பலமுறை திரும்பிப் பார்த்தேன். பாம்பு வரவில்லே. கரைக்கு வந்து சேர்ந்தவுடனே இந்தத் தீவிலிருந்து எப்படியேனும் வெளியேறிப் போகலாமென்று யோசித்தேன். அந்தப் பெண் யாரென்று தெரிந்துகொண்ட பிறகுதான் அந்தத் தீவிலிருந்து புறப்பட வேண்டுமென்று மற்ருெரு யோசனையுண்டாயிற்று, அப்போது பசியும் களைப்பும் அதிகமாக இருந்தபடியால் அவற்றைத் தீர்க்க ஏதேனும் வழியுண்டா என்று சுற்றிப் பார்த்தேன். கரையோர ம்ாகவே நெடுந்தாரம் நடந்து வந்தபோது அங்கே ஒரு குடிசை தென்பட்டது. அந்தக் குடிசைக்குள்ளே போய் நுழைந்தேன். அதற்குள்ளே ஒரு பிள்ளையார் வைத்திருந்தது. அந்த மூர்த்தியின் முன்னே ஓரிலையில் சோறு, கறி, பாயஸம், பகூடிணம் முதலியன வும், ஒரு குடத்தில் நீரும், பக்கத்தில் புஷ்பம், சந்தனம் முதலிய