பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல் 63 பூஜா திரவியங்களும் வைத்திருக்கக் கண்டேன். எனது பசியின் கொடுமையில்ை அந்த ஆஹாரத்தைத் தின்றுவிடலா மென்று யோசித்தேன். பிறகு சிந்தனே பண்ணிப் பார்த்தேன், ' போன ஜன்மத்தில் என்ன பாவம் பண்ணியோ இந்த ஜன்மத்தில் இந்தத் தீவில் வரவும் இத்தனே கஷ்டப்படவும் ஹேதுவுண்டாயிற்று. இப்போது பசி துன்பத்தைப் பெரிதாக எண்ணி, எந்த மஹானே ஸ்வாமி பூஜைக்காக வைத்திருக்கும் திருவமுதை அபகரித்தால், இன்னும் பாவமேற்படும். ஆதலால் அந்தக் காரியம் செய்யக் கூடாது என்று தீர்மானம் செய்துகொண்டேன். பசி தாங்க வில்லை, காமே பூஜை நைவேத்தியம் முடித்துவிட்டுப் பிறகு அந்த உணவைக் கொள்ளலாமென்று கினைத்து ஸ்கானம் செய்ய இடம் கிடைக்குமா என்று பார்க்கும்பொருட்டு வெளியே வந்து சிறிது துாரம் சுற்றிப் பார்த்ததில் அங்கே ஒரு சுனே இருந்தது. அதில் ஸ்கானம் செய்து ஸந்தி முதலிய கர்மங்களை முடித்துவிட்டு மறுபடி குடிசைக்குள்ளே போய்ப் பார்க்கையில் பிள்ளையார் மாத்திரங்தானிருந்தது. சோறு, வடை, தண்ணிர், பூ, சந்தனம், ஒன்றையும் காணவில்லை. எனக்கு வயிற்றெரிச்சல் பொறுக்க முடியவில்லை. ' பிள்ளையாரே, பிள்ளையாரே உனக்கு எங்கள் வேதபுரி சேர்ந்தவுடனே முப்பத்து மூன்று தேங்காய் உடைத்துப் பூஜை செய்கிறேன். எனக்கிந்த ஆபத்து நேரத்தில் உதவி செய்ய மாட்டாயா ?' என்று வேண்டி வருத்தப்பட்டேன். இங்கிலையில் எனது கனவு தடைப்பட்டது. பல குழப்பங்க ளுண்டாயின. செய்தி கினேப்பில்லே, பிறகு மறுபடியும் நான் கடலலைகளின்மீது மிதந்து செல்வது கண்டேன். யுகப்ரளயம் போல இருந்தது. என் கைகள் புடைத்தன. கண் தெரியவில்லை. பிரக்கினே சரியில்லே. கடலேத் திவலே திவலையாக உடைத்து காசம் செய்துவிடவேண்டுமென்ற நோக்கத்துடன் வாயு புடைப்பது போலிருந்தது. அந்தச் சமயத்தில் எனதுடம்பைக் கடலலைகள் பந்தாடின. என்னுயிரைக் கால தூதர் பந்தாடுவது போலத் தோன்றிற்று. அப்போது மீண்டும் குலசக்தியின் பெயரை ஸ்மரித்து விநாயகரை கினைத்துப் 'பிள்ளையாரே, என்னே வேதபுரத்துக் கரை சேர்த்து விட்டால் உமக்கு மூவாயி ரத்து முந்நூறு தேங்காய் உடைக்கிறேன். காப்பாற்ற வேண்டும், காப்பாற்ற வேண்டும் ' என்று என்னே அறியாமல் கூவினேன்.