பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கத்திச் சண்டை 6? கார்ந்து கொண்டு பேசலாம். நானும் உன்னிடத்தில் பல கேள்வி கள் கேட்கவேண்டுமென்று நெடுநாளாக யோசனை பண்ணிக் கொண்டிருந்தேன். இறங்கி வருவீரா? என்று கேட்டான். "இவன் என்னடா : வெகு விசேஷத்தகைத் தெரிகிறதே !' என்று நான் ஆச்சரியப்பட்டுக் கீழே இறங்கி வருவதாக ஒப்புக் கொண்டேன். அவன் வாசற்படியேறி திண்ணையில் உட்கார்க் தான். கான் கீழே போகையில் ஒரு மழை லாந்தர் கொளுத்திக் கொண்டு போனேன். அவன் கையிலும் ஒரு மழை லாந்தர் கொண்டு வந்திருந்தான். திண்ணையில் போய் உட்கார்ந்த உடனே காங்கள் இருவரும் ஒருவரை யொருவர் ஏற இறங்க பார்த்துக் கொண்டோம். அவன் தலே சுத்த மொட்டை, உடம்பு ஒற்றை காடி, சதைப்பற்றுக் கிடையாது. ஆல்ை உறுதியான உடம்பு ; மேலே துணி கிடையாது. இடுப்பில் மாத்திரம் ஒரு துணி கட்டிக் கொண்டிருந்தான். மேலெல்லாம் மழைத்தண்ணிர் ஒடுவதை அவன் துடைக்கவில்லை. குளிரினல் அவன் முகம் விகாரப்பட வில்லை. அவனைப் பார்த்தவுடனேயே எதேைலயோ ஹம்ஸ் பrயின் ஞாபகம் வந்தது. ஹாம் ! ஆமாம் ! அவன் முன்பு கடந்து செல்லக் கண்டபோது கான் என் மனதில், இவன் என்னடா, அன்ன நடை நடக்கிருன் ! என்று நினைத்துக் கொண்டேன். மேலும், இவன் ஆசாமியைப் பார்த்தால் கோயில் அன்னவாஹனம் எத்தனே பொறுமையும், இனிமையுமாகத் தோன்றுமோ அத்தனே பொறுமையும் இனிமையுமான முக வசீகரமுடையவகை இருந்தான். நான் அப்போது அவனே நோக்கி :- " என்னிடம் ஏதோ கேள்விகள் கேட்க வேண்டுமென்று நெடுங்காலம் யோசனை, செய்து கொண்டிருந்ததாகச் சொன்னயே, கேள் ” என்றேன். அப்போது கெட்டை மாடன் சொல்லுகிருன் :" உன்னிடம் கேள்விகள் கேட்க வேண்டுமென்ற விருப்ப மிருந்ததாக நான் தெரிவிக்கவில்லை. உன்னிடம் ஸம்பாஷணை செய்ய வேண்டுமென்ற விருப்பமிருந்ததாகச் சொன்னேன். t ஏதாவது கேள்வி கேள். நான் ஜவாப் சொல்லுகிறேன். அது தான் எனக்குகந்த ஸம்பாஷணை' என்ருன். ' இதென்ன ஸங்கடம் ” என்று யோசித்து, நான் இவனிடம் முன் கேட்ட