பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பாரதி தமிழ் கேள்விகளைத் திரும்பவும் கேட்டேன். ' ; ஸங்கீதம் எங்கே படித்தாய் இத்தனை காலம் எந்த ஊரில் இருந்தாய் ?” என்று வினவினேன். கெட்டை மாடன் சொல்லுகிருன் :- அறிவூர் வீணே ரகு காத பட்டர் மகன் ஆஞ்சனேய பட்டரிடம் கான் ஸங்கீதம் வாசித் தேன். இதுவரை அந்த ஊரிலே தான் வாஸம் செய்தேன் ” என்ருன். அப்போது கான் கேட்டேன் :- “ தம்பி நெட்டை மாடா, ே ஜாதியில் வள்ளுவனயிற்றே ! ரகுநாதபட்டர் ஆஞ்சனேய பட்டர் என்ற பெயர்களைப் பார்த்தால் அவர்கள் பிராமணராகத் தோன்று கிறதே! உங்கள் ஜாதியார் பிராமணருக்கு ஸ்மீபத்தில் வந்தால் கூட தீண்டல் தோஷம் என்று சொல்லுவது வழக்கமாயிற்றே. அப்படியிருக்க நீ அவரிடம் ஸங்கீதம் எப்படிப் படித்தாய் ?” என்றேன். அதற்கு நெட்டை மாடன் சொல்லுகிருன்:- " நீ கேட்ட கேள்விக்கு ஜவாப் சொல்ல வேண்டுமானல் என்னுடைய கதையை ஆரம்பத்திலிருந்தே தொடங்கிச் சொல்ல வேண்டும். அவ்வளவு தூரம் பொறுமையுடன் கேட்பாயா?” என்ருன். " கேட்கிறேன்” என்று சொல்லி உடம்பாடு தெரிவித்தேன். அப்போது கெட்டை மாடன் சொல்லுகிருன்: " கான் வேதபுரத்தில் இருபத்தாறு வருஷங்களுக்கு முன் பிறந்தேன். என் தகப்பனர் சோற்றுக் கில்லாமல் கான் நாலு வயதுப் பையனாக இருக்கும் போது ஒரு ஸர்க்கஸ் கம்பெனியாருக்கு என்னை விற்று விட்டார். அந்தக் கம்பெனியில் குராதி சூரத்தன மான வேலைகள் செய்து மிகுந்த கீர்த்தி ஸம்பாதித்தேன். பன்னி ரண்டு வயதாக இருக்கும்போது அறிவூருக்குப் போனேன். அந்தக் கம்பெனித் தலைவரான மஹாராஷ்ட்ரப் பிராமணருக்கு என்னிடம் மிகுந்த அபிமானம். அறிவூர் என்பது மலை நாட்டில் ஒரு பெரிய ஜமீந்தாருடைய ராஜதானி ககரம். அந்த ஊரில் ஸர்க்கஸ் இரண்டு மாஸம் ஆடிற்று. அப்போது என்னுடைய எஜமானனகிய ராயருக்கு வயதாய் விட்டபடியால் சீக்கிரத்தில் கம்பெனியைக் கலைத்துவிட்டுப் பண்டரிபுரத்துக்குப் போய் அங்கு வீடு வாங்கித் தனது முதுமைப் பருவத்தை ஹரி பக்தியில் செல