பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கத்திச் சண்டை 69 விட வேண்டுமென்ற யோசனை பண்ணிக் கொண்டிருந்தார். அவருக்கும் ஜமீந்தாருக்கும் மிகுந்த நட்புண்டாயிற்று. ஜமீந்தார் கத்திச் சண்டையில் கெட்டிக்காரனாகவும் வயதில் குறைந்தவகை வும் தனக்கொரு பக்கச் சேவகன் வேண்டுமென்று விரும்பினர். என்னுடைய எஜமானகிய ராயர் என்னே சிபாரிசு பண்ணினர். இதற்கிடையே எனது தகப்பனருக்கும் எஜமான் ராயருக்கும் அடிக்கடி கடிதப் போக்கு வரவு கடந்து கொண்டு வந்தது. எனது தகப்பனரும் என்னை அடிக்கடி பல ஊர்களில் வந்து பார்த்துக் கொண்டிருந்தார். அறிவூர் ஜமீந்தார் எனக்கு அரண்மனையிலே சோறு போட்டு மகன் போலே வளர்த்தார். ஸங்கீதம் அந்த ஸ்மஸ்தானத்து பாகவதராகிய ஆஞ்சனேய பட்டரிடம் படித் தேன். யோகாப்யாசம் பண்ணியிருக்கிறேன். கத்திச் சண்டை யிலே பேர் வாங்கியிருக்கிறேன். ஆறு பாஷை பேசுவேன். பாடு வேன். காட்டியமாடுவேன். மிருதங்க மடிப்பேன். ஆனே யேற் றம், குதிரை யேற்றம், கழைக் கூத்து, மல் வித்தைகள்-எனக் குப் பல தொழிலும் தெரியும் ' என்று சொன்னன். இதற்குள் பொழுது விடிந்து விட்டது. நல்ல ஸார்யோத யத்தில் அவன் முகத்தைப் பார்க்கும்போது நல்ல சுந்தர ரூப முடையவனாக இருந்தான். அப்போது நான் அவனே நோக்கி:- " நீ இன்று நம்முடைய வீட்டிலேயே காலை நேரம் போஜனம் செய்துகொள். உன்னுடைய கத்தி சுற்றும் திறமையை எனக்கும் கொஞ்சம் காண்பி ' என் றேன். சரி யென்று ஸம்மதப்பட்டான். பின்பு சொல்லுகிருன் :" எனக்கு சரியாகக் கத்தி சுழற்றக் கூடியவர்கள் இந்த ஊரில் ஒரே மனுஷ்யன் தான் இருக்கிருர். கான் போய் என் வீட்டிலிருந்து கத்திகளே எடுத்துக் கொண்டு அவரையும் அழைத்துக் கொண்டு வருகிறேன் ' என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டு போய், மறுபடி ஐந்து..மணியிருக்கும் போது வந்தான். இவன் பட்டாக் கத்தி, உண்மையான,. . . .சண்டைக் கத்திகள் கொண்டு வருவா னென்று நான் கினைத்திருந்தேன். இரண்டு மொண்ணை வாள்வெண்ணெயை வெட்டும் ஸர்க்கஸ் கத்திகள் கொண்டு வந்தான். தனக்கு எதிர் கின்று சண்டை போடக்கூடிய வீராதி வீரனே என் னிடம் அழைத்து வருவதாக அவன் வாக்குக் கொடுத்தபடி அந்த