பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பெண் வேதபுரத்தில் தர்மவீதியில் வாத்தியார் பிரமராய அய்யர் என்ருெரு பிராமணர் இருக்கிருர். இவர் சாக்த மதத்தைச் சேர்ந்தவர். " சக்திபூஜை' பண்ணுவோரில் சிலர் மதுமாம்ஸ் போஜனம் செய்கிருர்கள். இந்த வாத்தியார் அப்படியில்லே. இவர் ' சுத்த சைவம்'; அதாவது ஆட்டுக் குட்டியை மாம்ஸம் தின்னும்படி செய்தாலும் செய்யலாம்; இந்த வாத்தியாரை.மாம் ஸம் தின்னும்படி செய்ய முடியாது. இவர் இங்கிலீஷ், ப்ரெஞ்சு என்ற இரண்டு பாஷைகளிலும் நல்ல பாண்டித்ய முடையவர். கொஞ்சம் ஸம்ஸ்கிருதமும் தெரியும். பகவத்கீதை, வால்மீகி ராமாயணம், குமார ஸம்பவம் மூன்று நூலும் படித்திருக்கிருர். வேதாந்த விசாரணையிலே நல்ல பழக்கமுண்டு. கதை, காலrேபம், உபங்யாஸம் முதலியன நடந்தால் தவருமல் கேட்கப் போவார். பெரும்பாலும் கதை கேட்டுவிட்டு அதிருப்தியுடனே திரும்பி வருவார். வீட்டுக்கு வந்து உபங்யாஸிகளின் கொள்கைகளை ஒரு மாஸம் தொடர்ச்சியாக நண்பர்களுடனே தர்க்கிப்பார். ' ஹிந்துக்கள் முற்கால்த்தில் நல்ல மேதாவிகளாக இருந்தனர். இன்னும் அதிசீக்கிரத்தில் மேலான நிலைமைக்கு வரப்போகிருர் கள். ஆனால், இந்தத் தேதியில், பண்டிதர்களாக வெளிப்பட்டு பிர ஸங்கங்களும், கதைகளும், காலகேஷபங்களும் கடத்தும் ஹிந்துக் களிலே நூற்றுக்கு தொண்ணுாறு பேர் சமையல் வேலைக்குப் போகவேண்டியவர்கள். அதை விட்டு, உலகத்துக்கு ஞானுேபதே சம் பண்ணக் கிளம்பிவிட்டார்கள். இது பெரிய தொல்லை. உபத் திரவம், தொந்தரவு, கஷ்டம், ஸங்கடம், ஹிம்ஸை, தலைநோவு. இந்தத் தேதியில், ஹிந்து ஜாதி முழு முடமாக இருக்கிறது. கம்மவர்கள் மூளைக்குள்ளே கரையான் பிடித்திருக்கிறது. எனக்கு ஹிந்துக்களின் புத்தியை நினைக்கும்போது வசிற்றெரிச்சல் பொறுக்க முடியவில்லை. படகோனியா தேசத்தில் கூட சராசரி நூற்றுக்கு இத்தனைபேர் மூடர்களாக இருப்பார்களென்று