பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பாரதி தமிழ் தோன்றவில்லை. ' என்று காலாவிதமாக நம் தேசத்தாரின் அறிவு கிலைமையை துாஷணை செய்துகொண்டேயிருப்பார். மேற்படி பிரமராய வாத்தியாருக்குத் தமிழிலும் கொஞ்சம் ஞானமுண்டு. ஐரோப்பியரின் சாஸ்திரங்களில் பலவற்றைத் தமிழில் எழுதியிருக்கிருர். சில சமயங்களில் கவிதை கூட எழுது வார். இவருடைய கவிதை மிகவும் உயர்ந்ததுமில்லே, தாழ்ந்தது மில்லே நடுத்தரமானது. இவருக்கு ஸங்கீதத்தில் நல்ல ஞான முண்டு. ஆனல் பாடத் தெரியாது. தொண்டை சரிப்படாது. தாளத்தில் மஹா நிபுணர். பெரிய பெரிய மிருதங்கக்காரரெல் லாம் இவரைக் கண்டால் பயப்படுவார்கள். இவர் இந்தத் தெருவில் வார்த்தை சொன்னல் மூன்ருவது தெருவுக்குக் கேட்கும். பகலில் பள்ளிக்கூடத்து வேலை முடிந்த வுடனே வீட்டுக்கு வந்து, ஸாயங்காலம் ஆறு மணி முதல் எட்டு மணிவரை தம் வீட்டுத் திண்ணையில் சிநேகிதர்களுடன் பேசிக் கொண்டு, அதாவது, கர்ஜனை செய்து கொண்டிருப்பார். பிறகு சாப்பிடப் போவார். சாப்பிட்டுக் கையலம்பி கை ஈரம் உலர்வ தற்கு முன்பு, மறுபடி திண்ணேக்கு வந்து சப்தம் போடத் தொடங்கிவிடுவார். இவருடைய வீட்டுத் திண்ணைக்கு அக்கம் பக்கத்தார் இடிப் பள்ளிக்கூடம் என்று பெயர் வைத்திருக்கி முர்கள். அந்த இடிப் பள்ளிக்கூடத்துக்கு வந்து மாலேதோறும் காலந்து பேருக்குக் குறையாமல் இவருடைய பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். அந்த நாலைந்து பேருக்கும் இன்னும் காது செவிடாகாமலிருக்கும் விஷயம் அனேகருக்கு ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. மேற்படி வாத்தியாருக்கும் எனக்கும் ஸ்நேகமுண்டு. கானும் அடிக்கடி இடிப்பள்ளிகூடத்துக்குப் போய் பேச்சுக் கேட்கும் வழக்கமுண்டு. ஹிந்துக்கள் பரம மூடர்களென்று அவர் சொல் லும் வார்த்தையை மாத்திரம் நான் அங்கீகாரம் செய்து கொள்வது கிடையாது. மற்றப்படி, அனேகம் விஷயங்களில் அவருடைய அபிப்பிராயங்கள் எனக்கு நியாயமாகவே தோன்றும். காலாகாள் ஞாயிற்றுக் கிழமை சாயங்காலம் மழைத்துாற்ற லாக இருந்தபடியால், நான் வெளியே உலாவப் போகாமல், பொழுது போக்கும் பொருட்டாக மேற்படி இடிப்பள்ளிக்