பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பாரதி தமிழ் வாத்தியார் கர்ஜனையைத் தொடங்கினர்:"நான் சொன்ன விஷயத்தைச் சுருக்கமாக, சக்தி தாஸ்”* ருக்கு மறுமுறை சொல்லிக் காட்டிவிட்டு மேலே சொன்னல் தான் அவருக்குத் தொடர்ச்சி தெரியும்' என்று சொல்லி பூர்வ கதையை யெடுத்தார். அந்த கிமிஷத்தில் வீராசாமி நாயக்கர் ஒரு தரம்பொடி போட்டுக் கொண்டு கொங்கண பட்டர் தலையில் ஒரு குட்டுக் குட்டினர். "சில்லரை விளையாட்டு வேண்டாம்; வாத்தியார் பிரசங்கம் நடக்கட்டும்” என்றேன். வாத்தியார் கர்ஜனை செய்யலானர், "இந்தியாவில் ஆண் பிள்ளைகளுக்குக்கூட வாக்குச் சீட்டுக் கிடையாது. அதாவது ஐனங்களுடைய இஷ்டப்படி ஆள் கியமித்து ஜன சபையாலே கடத்தும் அரசாட்சி யுரிமை ஹிந்துக் களுக்குக் கிடையாது. ஹிந்துக்களுக்குப் புத்தி சொற்பம். நம் முடையதேசத்தில் ஆண் பிள்ளைகளுக்குக் கிடையாத மேற்படி வாக்குச் சீட்டுச் சுதந்திரம் வேறு சில தேசங்களிலே பெண்களுக்கு உண்டு. அதாவது, அரசாட்சி இன்னபடிதான் கடக்கவேண்டு மென்று நியமிக்கும் பாத்தியதை அங்கே ஸ்திரீகளுக்கும் உண்டு. "ஆஸ்திரேலியா, யூேஸிலாந்து, டென்மார்க், நார்வே, யுனே டெட் ஸ்டேட்ஸ்லே பாதி, கானடா-இத்தனே தேசங்களில், பெண்களுக்கு வாக்குச் சீட்டு கெட்டியாகவுண்டு. இங்கிலாந்திலே கூட அந்த அநுஷ்டானத்தை ஏற்படுத்த வேண்டுமென்று பலர் மன்ருடுகிருர்கள். போன மந்திரி ஆஸ்க்வித் கூட அந்தக் கட்சியை நெடுங்காலமாக எதிர்த்து வந்து, ஸ்மீபத்தில் அதற் கனுகூலமாகப் பேசுகிருரென்று கேள்வி. இதை விடுங்கள். " துருக்கி தேசம் தெரியுமா? அங்கே கேற்று வரை ஸ்திரிகளை மூடிவைத்திருப்பது வழக்கம். கஸ்துாரி மாத்திரைகளை டப்பியில் போட்டு வைத்திருக்கிருர்களோ இல்லையோ? அந்த மாதிரி, திறந் தால் வாசனை போய்விடும் என்று. கம்முடைய தேசத்திலேயே கூட அநேக ஜாதிக்காரர் அந்த மாதிரிதானே செய்கிருர்கள்.

  • நீ பாரதியாரின் புனை பெயர்.