பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தமிழ்நாட்டின் விழிப்பு ஜீவஹிம்ஸை கூடாது. மது மாம்ஸங்களால் பெரும்பான்மை யோருக்குத் தீங்கு உண்டாகிறது. மது மாம்ஸங்கள் இல்லாதி ருத்தல் பிராமணருக்குப் பெரிய கீர்த்தி. அது பெரிய தவம். அது கிருத யுகத்துக்கு, வேராகக் கருதக் கூடிய அநுஷ்டானம். ஆனலும், தாம் ஒரு காரீயத்தைச் செய்யாமலிருக்குமிடத்து, அதைப் பிறர் செய்யும்போது அஸஅயை கொள்வது தவறு. ஊன், உடை, பெண் கொடுக்கல் வாங்கல் முதலிய விஷயங் களில் மூடத்தனமாகக் கட்டுப்பாடுகளும் விதிகளும், தடைகளும் கட்டுவதில் யாதொரு பிரயோஜனமும் கிடையாது. மேலும், உலகத்து மனிதர்களெல்லாரும் ஒரே ஜாதி. 'இந்தச் சண்டையில் இத்தனை ஐரோப்பியர் அகியாயமாக மடி கிருர்களே என்பதை நினைத்து நான் கண்ணிர் சிந்தியதுண்டு. இத்தனைக்கும் சுதேசியத்திலே கொஞ்சம் அழுத்தமானவன். அப்படியிருந்தும் ஐரோப்பியர் மடிவதில் எனக்கு சம்மதம் கிடை யாது. எல்லா மனிதரும் ஒரே வகுப்பு. சகல மனிதரும் சகோதரர். மனுஷ்ய வர்க்கம் ஒருயிர். இப்படியிருக்க, நாம் ஒரு வீட்டுக்குள்ளே மூடத்தனமான ஆசா ரச் சுவர்கள் கட்டி, "நான் வேறு ஜாதி, என் மைத்துனன் வேறு ஜாதி, இருவருக்குள் பந்தி போஜனம் கிடையாது. அவனே ஜாதிப் பிரஷ்டம் பண்ண வேண்டும்' என்பது சுத்த மடமை யென்பதைக் காட்டும் பொருட்டாக இத்தனை தாரம் எழுதி னேனே தவிர வேறில்லை. தமிழ் நாட்டில் ஜாதி ஸம்பந்தமான மூட விதிகளும் ஆசா ரங்களும் சடசட வென்று நொறுங்கி விழுகின்றன. அடுத்த விஷயம், பெண் விடுதலே. தமிழ் நாட்டில் பெண் விடுதலைக் கrக்குத் தலைவியாக பூரீமான் நீதிபதி சதாசிவய்யரின் பத்தினி மங்களாம்பிகை விளங்குகிருர். நீ அனி பெசண்ட்