பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

99 வேண்டும். நடக்க முடிந்தாலும் முடியும்; நிலையாய் நிற்க முடியாது; நின்றால் கீழே தள்ளும்; எதையாவது பிடித் துக் கொண்டே நிற்க வேண்டும். வலப் பக்கம் மட்டுமே ஒருக்களித்துப் படுக்க முடியும். இடப்பக்கம் ஒருக்களித்துப் படுத்தால் இருதயம் மரத்துப்போய்ப் புண்ணாக நோகும். இதுகாறும் என் உடல்நிலை குறித்துக் கூறப்பட்டன வெல்லாம் இப்போதும் ஓரளவு உண்டு. ஒரளவே நலம் பெற்றுள்ளேன். இப்போது இரவிலே விளக்கு வெளிச்சத்திலே ஓரளவு நேரம் கறுப்புக் கண்ணாடி இல் லாமலேயே இருக்க முடிகிறது. ஐயையோ! பொறுத்தருள்க. சொல்ல வேண்டியதை விட்டுவிட்டு என்னைப் பற்றிச் சொல்லி விட்டேனே! இதற்கும் காரணம் உண்டு: நான் ஏறியிருந்த புகைவண்டியின் இரண்டாம் வகுப் புப் பெட்டியில் மெத்தை போட்ட நீளமான இரண்டே படுக்கைகள் இருந்தன. ஒன்றில் நான் படுத்திருந்தேன். விளக்கு கண்களில் படாமல் இருப்பதற்காக, அந்தப் படுக் கையின் சாய்மானப் பக்கம் முகத்தையும் மார்பையும் வைத்துக்கொண்டு வலப்பக்கமாக ஒருக்களித்துப் படுத் திருந்தேன். இன்னொரு படுக்கை, என் பின் பக்கம்-என் முது குக்குப் பின்பக்கம் இருந்தது. அதில் யார் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. நான் ஏறிய பிறகு திண்டி வனம் வரை என்னைத் தவிர வேறு யாரும் அந்தப் பெட்டியில் இல்லை. இப்போது திண்டிவனத்தில் ஏறிய வர்களின் குரல்கள் அறிமுகமானவையாய்த் தென்பட்ட தால், நான் மெள்ள எழுந்து அவர்கள் பக்கமாக உடம் பைத் திருப்பிப் பார்த்தபோது, மன்னர் மன்னனும் அவ ருடைய மனைவி மக்களும் இருந்ததைக் கண்டேன். பின் ஒருவருக்கொருவர் வணக்கம் செலுத்திக் கொண்டோம்.